இந்திய சினிமாவில் மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் எஸ்.ஷங்கர். வித்யாசமான கதையை கொண்டு அதில் பிரம்மாண்டத்தை புகுத்தி பல தாசப்தங்களாக ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி வருபவர் இயக்குனர் ஷங்கர். இவரது முந்தைய திரைப்படமான ‘எந்திரன் 2.0’ வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றி பெற்றது. அப்படத்தின் மூலம் பிரம்மாண்டத்தின் உச்சத்தை இந்திய சினிமாவிற்கு காட்டினார் இயக்குனர் ஷங்கர். அப்படத்தை தொடர்ந்து இயக்குனர் ஷங்கர் இயக்கிய திரைப்படம் ‘இந்தியன் 2’. உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில் 1996 ல் வெளியான ‘இந்தியன்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை கையிலெடுத்த இயக்குனர் ஷங்கர். அப்படத்தை விறுவிறுப்பாக எடுத்து வந்திருந்தார். லைகா தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் உலகநாயகன் கமல் ஹாசனுடன் இணைந்து சித்தார்த், பாபி சிம்ஹா, காஜல் அகர்வால். பிரியா பவானி ஷங்கர் ஆகியோர் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு இசையமைக்கிறார் அனிரூத். படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாக திரைப்படம் பாதியிலே நின்றது. அதன் பின் உலகநாயகனும் இயக்குனர் சங்கரும் இந்தியன் 2 திரைப்படத்தை கைவிட்டனர். இடையே கமல் ஹாசன் நடிப்பில் வெளியான ‘விக்ரம்’ மிகப்பெரிய வெற்றி பெற்றதால் மீண்டும் இந்தியன் 2 திரைப்படத்தை எடுக்க முடிவெடுத்தது படக்குழு அதன்படி மீண்டும் இந்தியன் 2 திரைப்படம் மும்முரமாக தொடங்கப்பட்டது.
இதே நேரத்தில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா தயாரிப்பில் உருவாகவுள்ள 25 வது படமான ‘RC15’ என்ற தெலுங்கு தமிழ் மொழி படத்தில் ஒப்பந்தமாகினார் இயக்குனர் ஷங்கர். இப்படத்தில் ராம்சரண், கியாரா அத்வானி, எஸ் ஜே சூர்யா, சுனில் ஆகியோர் நடிக்கவுள்ளனர். இசையமைப்பாளர் தமன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் பூஜை கடந்த ஆண்டு நடைபெற்றது.
ஒரே நேரத்தில் இரண்டு படங்களையும் முடித்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ள இயக்குனர் ஷங்கர் இரண்டு படத்திற்கான படப்பிடிப்பு திட்டத்தை நேர்த்தியாக பிரித்து படப்பிடிப்பை தொடங்கினார். அதன் படி ஒருபுறம் கமல் நடிக்கும் இந்தியன் 2 திரைப்படத்தையும் ராம் சரண் நடிக்கும் RC15 திரைப்படத்தையும் இயக்கி வருகிறார் இயக்குனர் ஷங்கர். முன்னதாக திருப்பதி பகுதிகளில் இந்தியன் 2 படத்தின் சில காட்சிகள் படமாக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து உடனடியாக உலகநாயகனின் இந்தியன் 2 படப்பிடிப்பை தொடங்கியுள்ளார். சென்னை ஆதித்ய ராம் ஸ்டுடியோவில் இந்தியன் 2 திரைப்படம் வரும் 30 நாட்களுக்கு படமாக்கப்படவுள்ளது. இந்த ஷெட்டியூலில் இயக்குனர் ஷங்கர் தற்போது மும்முரம் காட்டி வருகிறார். இதுகுறித்த தகவல் சமீபத்தில் வெளியாகி வைரலனாது.ஒரே நேரத்தில் இரண்டு விதமான படக்குழுவுடன் பணியாற்றும் ஷங்கர் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். கூடிய விரைவில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் தொடர்ந்து இரண்டு திரைப்படங்கள் திரையில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 90 களில் காட்டிய அதே வேகத்தை ஷங்கர் தற்போது கையிலெடுத்து உள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.