மலையாளத் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் நடிகர் நிவின் பாலி இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் வெளிவந்த நேரம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதனையடுத்து நிவின் பாலி நடிப்பில் வெளிவந்த பிரேமம் திரைப்படம் இந்திய அளவில் மெகா ஹிட்டானது.
முன்னதாக மலையாளத்தில் நிவின்பாலி நடிப்பில் துறமுகம் மற்றும் மஹாவீரயர் ஆகிய திரைப்படங்களின் இறுதிகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த இரு படங்களும் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அடுத்ததாக மலையாளத்தில் படவெட்டு திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.
இதனிடையே கற்றது தமிழ், தங்க மீன்கள், பேரன்பு, தரமணி என சிறந்த படைப்புகளை வழங்கி வரும் தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர்களில் ஒருவராக விளங்கும் இயக்குனர் ராம் இயக்கத்தில் புதிய படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார் நிவின்பாலி. மேலும இப்படத்தில் அஞ்சலி மற்றும் சூரி முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இத்திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ரயில் செட் அமைக்கப்பட்டு தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பு நடைப்பெற்று வரும் நிலையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து புதிய ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் தற்போது வெளியானது. சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் அந்த புகைப்படங்கள் இதோ...
#VHouseProductions #ProductionNo7 shooting spot stills #NivinPauly #Ram - #Yuvan 👌#DirectorRam @NivinOfficial @thisisysr @sooriofficial @yoursanjali @eka_dop@UmeshJKumar @silvastunt@johnmediamanagr pic.twitter.com/FT83fDpLoa
— sureshkamatchi (@sureshkamatchi) March 25, 2022