தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனரான விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா இருவரின் தயாரிப்பு நிறுவனமான ரவுடி பிக்சர்ஸ் சார்பில் இருவரும் தற்போது திரைப்படங்களை தயாரித்து வருகிறார்கள். முன்னதாக இவர்களது தயாரிப்பில் உருவான கூழாங்கல் திரைப்படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்படும் அந்தஸ்தை பெற்றது குறிப்பிடத்தக்கது.
அடுத்ததாக இவர்களது தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் வெளிவர உள்ள ராக்கி திரைப்படத்தின் புதிய தகவல் வெளியானது. இயக்குனர் ராம் இயக்கத்தில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற தரமணி திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான வசந்த் ரவி நடித்துள்ள ராக்கி திரைப்படத்தை இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்க தயாரிப்பாளர் மனோஜ் குமார் தயாரித்துள்ளார்.
என்னை நோக்கி பாயும் தோட்டா திரைப்படத்தின் இசையமைப்பாளர் தர்புகா சிவா இசையமைத்துள்ள ராக்கி திரைப்படத்தில் ஜகமே தந்திரம் திரைப்படத்தின் ஒளிப்பதிவாளரான ஷ்ரெயேஸ் கிருஷ்ணா இத்திரைப்படத்தை ஒளிப்பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ராக்கி திரைப்படத்தின் டீசர் கடந்த வருடம் வெளியானது.நடிகர் வசந்த் ரவி, ரவீனா ரவி, பாரதிராஜா, ரோகிணி உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ள இப்படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இது தொடர்பாக சமூக வலைதளங்களில் பரவிய ஒரு MEMEக்கு இயக்குனர் விக்னேஷ் சிவன் பதில் அளித்துள்ளார்.ராக்கி திரைப்படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட்டை கேட்கும் விதமாக வைகைப்புயல் வடிவேலுவின் புகைப்படம் இருக்கும் அந்த MEME-ஐ இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோர்ஸில் பகிர்ந்து “தியேட்டர் ஓபன் பண்ண உடனே” என பதிலளித்துள்ளார். இயக்குனர் விக்னேஷ் சிவனின் இந்த அறிவிப்பு தற்போது ராக்கி திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.