மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் தற்போது சென்னை அடையாறு எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடைபெற்றுவருகிறது. இந்த தேர்தலில் தற்போதைய தலைவர் தேனாண்டாள் முரளி அணியும் மற்றொரு அணியில் மன்னன் அவர்களும் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலின் மூலம் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் தலைவர், 2 துணை தலைவர்கள், செயலாலளர், பொருளாளர் மற்றும் 26 செயற்குழு உறுப்பினர்கள் என்று தேர்வு செய்யப்படவுள்ளனர். காலை 9 மணியளவில் தொடங்கப்பட்ட இந்த தேர்தலில் தமிழ் திரைப்பட தயாரிபளர்கள் பல தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். இந்த தேர்தலுக்கான முடிவு நாளை வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் வாக்கு செலுத்த வந்த இயக்குனர் மிஷ்கின் அவர்களிடம் தளபதி விஜய் நடித்து வரும் லியோ படம் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர், “லியோ படம் அற்புதமாக படமாகி வருகிறது. நான் சிறிய கதாபாத்திரத்திரத்தில் தான் நடித்துள்ளேன். ஆனால் ரொம்ப வித்யாசமான கதாபாத்திரத்திரம். ரொம்ப வருஷம் கழித்து விஜய் கூட இருந்தது ரொம்ப சந்தோஷம். தம்பி என்னை ரொம்ப பத்ரமா பாத்துக்கிட்டார். ரொம்ப அன்போடு இருந்தார். இத்தனை வருஷத்துல அவர் மாறவே இல்ல.. அது ரொம்ப ஆச்சர்யமா இருந்தது. லோகேஷ் ரொம்ப இனிமையான பையன். ரொம்ப மேன்மையான குணம். “ என்றார். பின் ஆக்ஷன் காட்சிகள் எப்படி வந்துள்ளது என்ற நிருபரின் கேள்விக்கு அவர், “விஜயும் லோகேஷும் சேர்ந்த ஆக்ஷன் இல்லாம எப்படி? ரொம்ப சுவாரஸ்யமான திரைப்படம். நல்லாருக்கும்.. “ என்றார் இயக்குனர் மிஷ்கின் .
இயக்குனர் லோகேஷ் கனகாராஜ் உடன் இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்திருக்கும் தளபதி விஜய், அட்டகாசமான ஆக்ஷன் திரைப்படத்தின் கதைக்களத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜயுடன் இணைந்து திரிஷா, ஆக்ஷன் கிங் அர்ஜுன், இயக்குனர்கள் மிஷ்கின் மற்றும் கௌதம் மேனன், பிரியா ஆனந்த், சஞ்சய் தத் உள்ளிட்டோர் மிக முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றது.செவன் ஸ்க்ரீன் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைத்துள்ளார். லியோ திரைப்படம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று இறுதிகட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது. இப்படத்தின் வெளியீடு வரு ஆயுத பூஜை தினத்தையொட்டி வெளியாகும் என்பது குரிப்பிட்தக்தக்கது. ரசிகர்களின் எதிர்பார்பை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் லியோ திரைப்படம் நிச்சயம் இந்திய சினிமாவில் கவனிக்கத்தக்க படமாக அமையும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்நிலையில் இயக்குனரும் லியோ படத்தின் நடிகருமான மிஷ்கின் அவர்கள் பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது