மாநகரம் படத்தின் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்தவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இந்த படத்திற்கு பிறகு நடிகர் கார்த்தி வைத்து கைதி திரைப்படத்தை இயக்கி வெற்றி கண்டார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து பொங்கலுக்கு வெளியாகி வெற்றிகரமாக ஓடிய திரைப்படம் மாஸ்டர். ரசிகர்களின் மனதிலும், வசூலிலும் சாதனைகள் படைத்து வெற்றி வாகை சூடியது இப்படம்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ், தற்போது முற்றிலும் குணமாகி இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் வாக்களித்துள்ளார். கடந்த மார்ச் 29-ஆம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார் லோகேஷ்.
அவர், மீண்டும் நல்ல உடல்நலத்தோடு வரவேண்டும் என்று அவரது ரசிகர்களும் திரை பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்திருந்தார்கள். இந்நிலையில் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில், கொரோனாவிலிருந்து முழுமையாக மீண்டுவிட்டேன். தற்போது கொரோனா நெகட்டிவ் என்று வந்துள்ளது. அனைவரும் வாக்களியுங்கள் என்று கூறியுள்ளதோடு இன்று வாக்களித்த புகைப்படத்தையும் பகிர்ந்துகொண்டுள்ளார்.
அந்த புகைப்படத்தை ஜூம் செய்த ரசிகர்கள், பின்னால் அபூர்வ சகோதரர்கள் படத்தின் காட்சி உள்ளதே என்று கமெண்ட் செய்து வருகின்றனர். லோகேஷ் கனகராஜ் தீவிர கமல் ஹாசன் ரசிகர் என்று அனைவருக்கும் தெரியும். ஓய்வில் இருப்பதால், உலகநாயகனின் படத்தை பார்த்து வருகிறார் போல என அன்பாக சாடி வருகின்றனர் திரை ரசிகர்கள்.
அடுத்ததாக உலக நாயகன் கமல் ஹாசன் வைத்து விக்ரம் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதன் ப்ரோமோ காட்சி வெளியாகி பட்டையை கிளப்பியது. அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார்.
Recovered from covid, tested negative! Thank you for all your wishes and prayers 🙏
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) April 6, 2021
Please vote 😄 pic.twitter.com/cDWnmjFmCE