ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டைன்மென்ட் நிறுவனத்தின் tதயாரிப்பில் வரும் மார்ச் 10 ம் தேதி வெளியாகவிருக்கும் திரைப்படம் ‘அகிலன்’. மெகாஹிட் திரைப்படமான ‘பூலோகம் திரைப்படத்தின் இயக்குனர் கல்யான் கிருஷ்ணன் இப்படத்தை இயக்க நடிகர் ஜெயம் ரவி இப்படத்தில் கதாநயாகனாக நடித்துள்ளார். துறைமுகம் மற்றும் அதை சுற்றி நடைபெறும் கதைக்களத்தை உருவாகியுள்ள அகிலன் திரைப்படத்தை பற்றி பல சுவாரஸ்யமான தகவல்களை இயக்குனர் கல்யாண் கிருஷ்ணன் மற்றும் நடிகர் ஜெயம் ரவி நமது கலாட்டா மீடியா பேட்டியில் கலந்து கொண்டு பகிர்ந்து கொண்டனர்.

இதில் கடந்த ஆண்டே வெளியாகவேண்டிய அகிலன் திரைப்படம் ஏன் தள்ளி போனது? பூலோகம் திரைப்படத்தை தொடர்ந்து இந்த படமும் இப்படி ஆனதை எப்படி பார்கிறீர்கள் என்ற கேள்விக்கு, இயக்குனர் கல்யான் கிருஷ்ணன், "பூலோகம் தள்ளி போனது உண்மைதான்.‌ ஆனால் அகிலன் படம் தள்ளிலாம் போகல.. எங்கள் திட்டமே இதுதான். படத்தில் Computer Graphics ஒரு 40 நிமிடத்திற்கு வருகிறது. அந்த நேரம் தான் படம் தாமதமானதே தவிர..‌ மற்றபடி அகிலன் தள்ளி போகல.." என்றார்.

மேலும் தொடர்ந்து நடிகர் ஜெயம் ரவி "தள்ளி போனாலும் இது எங்க செண்டிமெண்ட்டா இருக்கட்டும். அது நல்ல எங்களுக்கு செட் ஆகுது.. நமக்கு என்னப்பா.. நல்ல படம் எடுக்கனும் நல்ல ஹிட் ஆகனும்.. அதுதான் அது எப்ப வருதுன்ற கவலையே கிடையாது. யாருமே செய்யமுடியாத படம் ‘பொன்னியின் செல்வன்’, அதுக்கு அவ்ளோ சர்ச்சை, அவ்ளோ பிரச்சனை அதுவே நம்ம செஞ்சிட்டோம்.. அதனால் ஒரு விஷயம் செய்யனும் நினைக்கிறோம். வரனும்னு இருக்கும் போது. நல்ல உழைப்பும் நல்ல மனசும் இருந்தா அது கண்டிப்பா வரபோகுது.." என்றார்.

அட்டகாசமான ஆக்ஷன் காட்சிகளுடன் உருவாகியுள்ள அகிலன் திரைப்படத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடிக்க, தான்யா ரவிச்சந்திரன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ஜிராக் ஜானி, ஹரிஷ் பெரடி, ஹரிஷ் உத்தமன், தருண் அரோரா மற்றும் மதுசூதன் ராவ் ஆகியோர் அகிலன் படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

மேலும் அகிலன் திரைப்படம் குறித்து சுவாரஸ்யமான தகவல்களை நடிகர் ஜெயம் ரவி பகிர்ந்து கொண்ட வீடியோ இதோ..