தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் அஜித்குமார் முதல் முறையாக இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் AK62 படத்தில் அடுத்து நடிக்க இருக்கிறார். லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் நடிகர்கள் அரவிந்த்சாமி மற்றும் சந்தானம் ஆகிய முக்கிய வேடங்களில் நடித்த இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக வலிமை படத்தின் வெற்றியை தொடர்ந்து மூன்றாவது முறையாக இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள துணிவு திரைப்படம் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட வருகிற ஜனவரி 11ஆம் தேதி பொங்கல் வெளியீடாக உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது.
போனிகபூர் தயாரித்துள்ள துணிவு திரைப்படத்தில், அஜித் குமாருடன் இணைந்து நடிகை மஞ்சு வாரியார் கதாநாயகியாக நடிக்க, சமுத்திரக்கனி, ராஜதந்திரம் வீரா, பிரபல பட்டிமன்ற பேச்சாளர் மோகனசுந்தரம், பால சரவணன், GM.சுந்தர், சிபி புவனச்சந்திரன், ஜான் கொக்கென், பிக் பாஸ் பாவணி, தர்ஷன், அமீர் மற்றும் மமதி சாரி உட்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்நிலையில் நமது கலாட்டா சேனலுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் துணிவு திரைப்படம் குறித்து பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து கொண்ட இயக்குனர் H.வினோத், “இந்த படத்தில் இருந்து ஒரு வசனம் சொல்கிறேன், “ஜனங்க எதை நம்புறாங்களோ அத உற்பத்தி பண்றதுல வியாபாரிகளுக்கு எப்பவுமே தயக்கம் இருந்ததே இல்ல அது உண்மையா இருந்தாலும் பொய்யா இருந்தாலும் நல்லதா இருந்தாலும் கெட்டதா இருந்தாலும்” என துணிவு படத்தில் இருக்கும் ஒரு வசனத்தை பிரத்தியேகமாக நமது கலாட்டா சேனலுக்கு அளித்த பேட்டியில் பகிர்ந்துள்ளார். ட்ரெண்டாகும் அந்த வீடியோ இதோ…