தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனராகவும் நடிகராகவும் விளங்கும் சசிகுமார் அவர்களின் இயக்கத்திலும் நடிப்பிலும் தயாரிப்பிலும் முதல் படமாக வெளிவந்த சுப்பிரமணியபுரம் திரைப்படம் கடந்த 2008 ஆம் ஆண்டு வெளிவந்து ஒட்டு மொத்த தமிழ் திரையுலகையும் திரும்பி பார்க்க வைத்தது. இந்த 2023 ஆம் ஆண்டு சுப்ரமணியபுரம் திரைப்படம் வெளியாகி 15 ஆண்டுகள் நிறைவு செய்ததை சமூக வலைதளங்களில் ரசிகர்களும் பிரபலங்களும் நினைவு கூர்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் நமது கலாட்டா பிளஸ் சேனலில் திரு.பரத்வாஜ் ரங்கன் அவர்களுடன் சுப்பிரமணியபுரம் திரைப்படம் 15 ஆண்டுகளை கடந்து இருப்பதை நினைவு கூறும் விதமாக நடந்த சிறப்பு நேர்காணலில் கலந்து கொண்ட இயக்குனரும் நடிகருமான சசிகுமார் அவர்கள் நம்மோடு பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அப்படி பேசும் போது, “நீங்கள் மதுரைக்காரர் தான்.. ஆனால் படித்தது எல்லாம் கொடைக்கானலில் உள்ள ஒரு பள்ளியில், அப்படி இருக்கும்போது சுப்பிரமணியபுரம் படத்தின் இந்த கதை களமும் மதுரையில் இப்படி எல்லாம் நடக்கிறது என்பதும் எப்படி உங்களுக்கு தெரிந்தது?” என கேட்டபோது,

“எல்லாம் கேள்விப்படுகிற விஷயங்கள் தான் எல்லோருமே என்னிடம் கேட்கும் போது நான் கொடைக்கானலில் படித்து வந்ததால், நான் அமீர் அண்ணனிடம் கதை சொல்லும் போது முழு கதையும் சொல்லி முடித்த போது, “நான் உன்னிடம் எதிர்பார்த்தது ஒரு கலர்ஃபுல்லான காலேஜ் சப்ஜெக்ட் தான்” என்று சொன்னார் ஜேம்ஸ் சாரிடம் சொல்லும் போதும், “நீ பள்ளிக்கூடத்தில் காமெடி தான் செய்வாய் நான் அப்படித்தானே எதிர்பார்த்தேன்” என்று சொன்னார். இப்போதும் கூட சொல்கிறார், “நல்ல ஒரு காமெடி படம் செய்” என சொல்கிறார் எல்லோரும் அதை தான் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் ஏன் என்று யோசித்துப் பார்க்கும்போது, எனக்கு மதுரை களம் பற்றி நிறைய தெரியாது. ஆனால் பேப்பரில் படிக்கும்போது மதுரையில் பார்க்கிற விஷயங்கள் கேள்விப்படுகிற விஷயங்கள் இதையெல்லாம் வைத்து தான் பண்ணினேன். எல்லோரும் கேட்டார்கள் இதெல்லாம் தெரிந்ததால் தான் நீங்கள் இதை செய்தீர்களா என்று ஆனால் உண்மையில் நான் இதை செய்வதற்கு காரணம் இதெல்லாம் எனக்குத் தெரியாத விஷயங்கள் தெரிந்த விஷயத்தை செய்திருந்தால் ஒருவேளை அசால்டாக நான் இருந்திருப்பேன் தெரியாத விஷயத்தை செய்யும்போது தான் நாம் அதிக ஈடுபாட்டோடு இருப்போம். அதில் நிறைய டீடெயில்ஸ் இருக்கின்றன. அதற்காக ஜெயிலுக்குள் போய் பார்க்கிறேன் உள்ளுக்குள் சென்று ரிசர்ச் செய்கிறேன். அப்போது எனக்கு தெரியவில்லை இந்த விஷயங்கள் அவ்வளவாக தெரியாது. அப்படி தெரியாத ஒரு விஷயத்தை நான் கற்றுக் கொள்ளும் போது கற்றுக் கொள்ளும் ஒவ்வொரு விஷயங்களும் புதிதாக எனக்குள் வருகின்றன. நான் ஒரு காலேஜ் படம் பண்ணுகிறேன் என்றால் அது எனக்கு நன்கு தெரிந்தது இப்படி தான் இருப்பார்கள் இந்த ஸ்டைலில் தான் இருப்பார்கள் என்பது எனக்கு தெரிந்த விஷயம் நான் வளர்ந்த விதம் அப்படி நான் தெரிந்த விஷயத்தை பண்ணும் போது நான் மிகவும் ஈசியாக எடுத்துக்கொள்வேன் ரொம்ப அசால்ட்டாகவும் இருப்பேன். இதில் சவால் என்னவென்றால் நான் ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்ய வேண்டும் அதற்காக நான் ஜெயிலுக்குள் போகிறேன், இந்த ரவுடி அந்த ரவுடி என ஒவ்வொருவரையும் பார்க்கிறேன் அதிலிருந்து விஷயங்களை எனக்குள் உள்வாங்கிக் கொள்கிறேன்” என பதில் அளித்துள்ளார். இன்னும் பல சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்ட சசிகுமாரின் அந்த முழு பேட்டி இதோ…