ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த துருவ நட்சத்திரம் திரைப்படம் கடைசி நேரத்தில் திடீரென ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சீயான் விக்ரம் கதையின் நாயகனாக நடித்த துருவ நட்சத்திரம் திரைப்படம் நீண்ட காத்திருப்புக்குப் பிறகு இன்று நவம்பர் 24ஆம் தேதி உலகம் எங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கான அனைத்து பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது இந்த நிலையில் திடீரென ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றம் அளிக்கும் வகையில் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டு இருப்பதாக அறிவிப்பு வெளிவந்துள்ளது இது குறித்து இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் தனது அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அந்த அறிக்கையில்,
“மன்னிக்கவும். துருவ நட்சத்திரம் இன்று திரைக்கு வரவில்லை. எங்களால் முடிந்தவரை முயற்சி செய்தோம். ஆனால் இன்னும் ஓரிரு நாட்கள் தேவை என்று தெரிகிறது. உலகெங்கிலும் உள்ள எல்லா இடங்களிலும் முன்பதிவுகள் மற்றும் சரியான திரைகள் மூலம் அனைவருக்கும் நல்ல அனுபவத்தை அளிக்க வேண்டும் என நம்புகிறோம்.
படத்துக்கான உங்களது ஆதரவு மனதிற்கு மிகவும் இதமானதாக இருக்கிறது, அது மேலும் எங்களை தொடர்ந்து பயணிக்க வைக்கிறது. இன்னும் சில நாட்களில் நாங்கள் வருவோம்!”
என குறிப்பிட்டுள்ளார். எனவே அடுத்த சில தினங்களில் எதிர்பார்த்தபடி துருவ நட்சத்திரம் திரைப்படம் கட்டாயமாக திரையரங்குகளில் ரசிகர்களுக்கு விருந்தாக வெளிவரும் என எல்லோரும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அது குறித்து அறிவிப்பும் வெகு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்ட குறித்து இயக்குனர் கௌதம் பகிர்ந்து அந்த அறிக்கை இதோ...
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர இயக்குனர்களில் ஒருவராக தனக்கென்று தனி பாணியில் பக்கா ஸ்டைலான திரைப்படங்களை கொடுத்து ரசிகர்களின் இதயங்களில் தனக்கென தனி இடம் பிடித்தவர் இயக்குனர் கௌதம் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் உடன் முதல் முறையாக சீயான் விக்ரம் இணைந்த அதிரடி படம் தான் துருவ நட்சத்திரம். சீயான் விக்ரம் உடன் இணைந்து ரிது வர்மா மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் துருவ நட்சத்திரம் திரைப்படத்தில் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் இயக்குனர் பார்த்திபன், சிம்ரன், திவ்யதர்ஷினி-DD , விநாயகன், அர்ஜுன் தாஸ், ராதிகா சரத்குமார், வம்சி கிருஷ்ணா, சதீஷ் கிருஷ்ணன், முன்னா சைமன், மாயா கிருஷ்ணன், அபிராமி வெங்கடாசலம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மனோஜ் பரமஹம்சா, SR.கதிர் மற்றும் விஷ்ணு தேவ் என மூன்று ஒளிப்பதிவாளர்கள் பணியாற்றி இருக்கும் இந்த துருவ நட்சத்திரம் திரைப்படத்திற்கு ஆண்டனி படத்தொகுப்பு செய்ய இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். பக்கா ஆக்சன் படமாக தயாராகி இருக்கும் இந்த துருவ நட்சத்திரம் திரைப்படத்திற்கு பிரபல ஸ்டண்ட் இயக்குனர் யானிக் பெண் ஸ்டன்ட் இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். முதல் அறிவிப்பு வந்ததிலிருந்து கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளாக கௌதம் வாசுதேவ் மேனன் அவர்களின் துருவ நட்சத்திரம் திரைப்படத்திற்காக ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில் தற்போது ஒத்திவைக்கப்பட்டு இருப்பது பெரும் ஏமாற்றத்தை கொடுத்தாலும் அடுத்த சில சில தினங்களில் நிச்சயம் படம் வெளியாகி விடும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.