ஆகச்சிறந்த நடிகராக ரசிகர்களின் இதயங்களை கொள்ளையடிக்கும் நடிகர் சீயான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி இளம் கதாநாயகராக வலம் வருகிறார். மிகக் குறுகிய காலகட்டத்திலேயே மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை தனக்கென ஏற்படுத்திக் கொண்ட நடிகர் துருவ் விக்ரமின் அடுத்த ஸ்பெஷல் ட்ரீட்டாக வருகிறது பூமதியே. தமிழ் சினிமாவின் மிக முக்கிய இசையமைப்பாளர்களில் ஒருவரான சந்தோஷ் நாராயணனின் இசையில் துருவ் விக்ரம் பாடி நடித்துள்ள புத்தம் புதிய மியூசிக் வீடியோ தான் இந்த பூமதியே. முன்னணி பாடலாசிரியர் விவேக் பூமதியே மியூசிக் வீடியோவின் பாடல் வரிகளை எழுதியுள்ளார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு வெளிவந்த ஆதித்யா வர்மா திரைப்படத்தின் மூலம் துருவ் விக்ரம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். தெலுங்கில் சூப்பர் ஹிட்டான அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் ரீமேக்காக வெளிவந்த ஆதித்யா வர்மா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நடிகர் துருவ் விக்ரம் தனது இரண்டாவது திரைப்படத்தில் தனது தந்தையும் நடிகருமான சீயான் விக்ரமுடன் இணைந்து நடித்தார். இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சீயான் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் இணைந்து நடித்த மகான் திரைப்படம் கடந்த 2022-ம் ஆண்டு நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து துருவ் விக்ரம் நடிக்கும் திரைப்படங்கள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளன.

அந்த வரிசையில் தமிழ் சினிமாவின் குறிப்பிடப்படும் இயக்குனராக தொடர்ந்து தரமான படைப்புகளாக பரியேறும் பெருமாள் & கர்ணன் ஆகிய படங்களை கொடுத்த இயக்குனர் மாரி செல்வராஜ் அடுத்து இயக்கும் புதிய படத்தில் துருவ் விக்ரம் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். தற்சமயம் மாரி செல்வராஜ் கையில் இருக்கும் மாமன்னன் மற்றும் வாழை ஆகிய திரைப்படங்களுக்கு பிறகு அர்ஜுனா விருது பெற்ற கபடி வீரர் மனத்தி.P.கணேசன் அவர்களின் பயோபிக் திரைப்படமாக உருவாகும் புதிய ஸ்போர்ட்ஸ் திரைப்படத்தில் துருவ் விக்ரம் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.நீண்ட காலமாக துருவ் விக்ரம் - மாரி செல்வராஜ் கூட்டணியில் உருவாகும் இந்த திரைப்படத்திற்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருப்பதால் வெகு விரைவில் அறிவிப்புகள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகராக மட்டுமல்லாமல் பாடகராகவும் தனது இசை ஆர்வத்தை வெளிப்படுத்தும் வகையில் கடந்த 2022 ஆம் ஆண்டு துருவ் விக்ரம் வெளியிட்ட மனசே மியூசிக் வீடியோ ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது. முன்னதாக மகான் திரைப்படத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் துருவ் விக்ரம் பாடி மிஸ்ஸிங் மீ என்ற பாடல் சூப்பர் ஹிட்டானது. அதைத் தெடர்ந்து சந்தோஷ் நாராயணன் உடன் தற்போது மீண்டும் பூமதியே பாடலில் துருவ் விக்ரம் இணைந்துள்ளார். வருகிற மே 7ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இந்த பூமதியே மியூசிக் வீடியோ பாடல் ரிலீஸாக உள்ளது. இதனை அறிவிக்கும் வகையில் சர்ப்ரைஸாக பூமதியே மியூசிக் வீடியோவின் ஒரு ப்ரோமோ வீடியோவை துருவ் விக்ரம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த ப்ரோமோ வீடியோ இதோ…