உலகளவில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி இன்று கிரிகெட் உலகின் மிகப்பெரிய ஜாம்பவனாக திகழ்ந்து வருபவர் மகேந்திர சிங் தோனி. கிரிக்கெட்டில் இருந்து ஒய்வு பெற்ற எம் எஸ் தோனி தன் மனைவி ஷாகஷியுடன் இணைந்து ‘தோனி என்டர்டேயின்மன்ட்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். அதன்படி எம் எஸ் தோனியின் முதல் தயாரிப்பில் தமிழில் உருவான திரைப்படம் ‘எல்ஜிஎம்’ (Let’s Get Married). அறிமுக இயக்குனர் ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் உருவான இப்படத்தில் கதாநாயகனாக ஹரிஷ் கல்யாண் நடிக்க அவருக்கு ஜோடியாக லவ் டுடே திரைப்பட புகழ் இவனா நடித்துள்ளார். மேலும் படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் பிரபல நடிகை நதியா நடிக்க இவர்களுடன் யோகி பாபு, ஆர் ஜே விஜய், தீபா, விடிவி கணேஷ், ஸ்ரீநாத், ஆர்ஜே விஜய், வினோதினி வைத்தியநாதன் என ஒரு நடிகர்கள் பட்டாளமே முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
தோனி என்டர்டைன்மென்ட் நிறுவனம் மற்றும் டெல்டா ஸ்டுடியோ நிறுவனம் இணைந்து வழங்கும் LGM (Let's Get Married) திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் விஷ்வாஜித் ஒளிப்பதிவு செய்ய பிரதீப் படத்தொகுப்பு செய்துள்ளார். மேலும் இப்படத்தின் இயக்குனர் ரமேஷ் தமிழ்மணி இசையமைத்துள்ளார். பாடலாசிரியர் மதன் கார்க்கியின் வரிகளில் உருவாகி இருக்கும் LGM பட பாடல்கள் மற்றும் முன்னோட்டம் முன்னதாக ரசிகர்களை கவர்ந்து படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டியது.
குடும்பங்கள் கொண்டாடும் விதத்தில் காமெடி கதைகளத்தில் காதல் கல்யாணம் இடையே நடைபெறும் சிக்கல்களை பேசும் படமாக உருவான எல்ஜிஎம் திரைப்படம் கடந்த ஜூலை 28ம் தேதி திரையரங்குகளில் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம். கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியானது.
எக்கச்சக்க எதிர்பார்ப்புகளுடன் வெளியான எல்ஜிஎம் திரைப்படத்திற்கு ரசிகர்கள் தங்களது ஆதரவை அளித்து இப்படத்தினை தற்போது வெற்றிபெற வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் படத்தில் இயக்குனரும் இசையமைப்பாளருமான ரமேஷ் தமிழ்மணி இசையில் மதன் கார்கி எழுதிய ‘டிக்கி டிக்கி டாடா’ என்ற பார்ட்டி பாடலின் வீடியோ வெளியாகியுள்ளது. இப்பாடலை பின்னணி பாடகர்கள் நித்யஸ்ரீ வெங்கடராமன், மது ஐயர் ஆகியோர் பாடியுள்ளனர். நதியா மற்றும் இவானா வின் அசத்தலான நடனத்துடன் வெளியான இப்பாடலின் வீடியோ தற்போது ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இணையத்தில் வைரலாகி வருகிறது.