இந்த ஆண்டின் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளியாகும் படங்களில் ஒன்று தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள வாத்தி திரைப்படம். தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் கல்வியையும் கல்வியில் நடக்கும் ஊழலையும் எடுத்து சொல்லும் படமாக உருவாகியுள்ளது வாத்தி திரைப்படம் திரைப்படமாக வாத்தி திரைப்படம் உருவாகியுள்ளது. பைலிங்குவலாக தமிழ் தெலுங்கு மொழிகளில் உருவாகியிருக்கும் இப்படத்தில் ஜூனியர் ஆசிரியராக தனுஷ் நடிக்கின்றார். அவருடன் இணைந்து சம்யுக்தா மேனன் கதாநாயகியாகவும் சமுத்திரக்கனி, சாய் குமார், ஆடுகளம் நரேன், இளவரசு, மொட்ட ராஜேந்திரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தெலுங்கு மொழியில் ‘சார்’என்ற பெயரிலும் வாத்தி என்ற பெயரில் தமிழிலும் வரும் பிப்ரவரி 17 ம் தேதி திரைக்கு வெளிவரவுள்ளது.

சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் பார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் இணைந்து தயாரிக்கும் வாத்தி திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ஏற்கனவே படத்தின் பாடல்களான ‘வா வாத்திபாடல் மற்றும் ‘நாடோடி மன்னன்’ ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் அமோக அமோக வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் தனுஷ் நடிப்பில் வெளியாகவுள்ள வாத்தி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாய் ராம் கல்லூரியில் நடைபெற்று வருகிறது. ரசிகர்கள் முன்னிலையில் படத்தில் பணியாற்றிய கலைஞர்கள் மற்றும் நடிகர்கள் கலந்து கொள்ளவிருக்கின்றனர். இந்நிலையில் படத்தின் ஐந்து பாடல்கள் கொண்ட தொகுப்பாக உள்ள வாத்தி ஆல்பம் தற்போது படகுழுவினரால் வெளியிடப்பட்டது.

'வா வாத்தி', 'நாடோடி மன்னன்', 'கலங்குதே', 'One Life', 'சூரிய பறவைகளே' ஆகிய பாடல்கள் கொண்ட ஆல்பமாக வெளிவந்துள்ளது. இதில் வா வாத்தி மற்றும் One Life பாடல்களை தனுஷ் எழுதியுள்ளார். இப்படத்தில் ஒரு பாடல் தனுஷ் பாடுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் அந்த வாய்ப்பு கிடைக்காமல் போய் விட்டது. இந்த படத்தில் அவர் எந்தவொரு பாடலும் பாடவில்லை. பாடல்கள் அனைத்தும் கேட்கும்படியும் ரசிக்கும்படியும் இருப்பதாக ரசிகர்கள் தங்களது கருத்துகளை இணையத்தில் தெரிவித்து வருகின்றனர்.

தனுஷ் ஜிவி பிரகாஷ் கூட்டணியில் உருவாகும் ஆறாவது படம் வாத்தி என்பதால் இப்படத்திற்கான பாடல்கள் ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இதற்கு முன்னதாக பொல்லாதவன், ஆடுகளம், மயக்கம் என்ன, அசுரன், மாறன் ஆகிய படங்களில் ஒன்றாக பணியாற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் ஜே.யுவராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். வாத்தி படத்தின் தமிழக விநியோக உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் கைப்பற்றியுள்ளது மேலும் வாத்தி திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமையை பிரபல ஒடிடி தளமான நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.