சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் சிறந்த பாடகி என்பது அனைவரும் அறிந்ததே. உலகநாயகன் கமல்ஹாசனின் டிக் டிக் டிக் படத்தில் இடம்பெற்ற நேற்று இந்த நேரம், வள்ளி படத்தின் டிங் டாங், குக்கூ கூவும் போன்று பல சிறந்த பாடல்களை பாடியுள்ளார். எந்த பாடல் பாடியிருந்தாலும், அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் கடவுள் உள்ளமே பாடல் அனைத்து திரை விரும்பிகளின் ஃபேவரைட். இன்று வரை இந்த பாடலை கோவில்கள், சர்ச்சுகள், மசூதிகள், பள்ளிகள் போன்ற பல இடங்களில் கேட்பதை பார்த்துள்ளோம்.

ரஜினிகாந்த் நடித்து வெளியான கோச்சடையான் படத்திலும், ரஹ்மான் இசையில் இடம்பெற்ற மணப்பெண்ணின் சத்தியம் பாடலை பாடியிருந்தார். இவரது குரலுக்கு பலரும் அடிமை என்றே கூறலாம். தொடர்ந்து பாடல்கள் இவர் பாடலாம் என்றும் ரசிகர்கள் ஏங்கியதுண்டு.

இந்நிலையில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு அன்பு ஒன்றுதான் என்ற பாடலை லதா ரஜினிகாந்த் பாடியுள்ளார். இந்த பாடலை எழுதி, இசையமைத்து, பாடியுள்ளார் லதா ரஜினிகாந்த். இதுகுறித்து தனுஷ் தனது ட்விட்டர் பதிவில், குழந்தைகளையே தனது உலகமாக மாற்றிக்கொண்ட தாய் உள்ளத்தில் இருந்து ஒரு பாடல், அற்புதம்...அன்புதானே எல்லாமே என பாராட்டி பதிவு செய்துள்ளார்.

சில நாட்கள் முன்பு கர்ணன் படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் மற்றும் மேக்கிங் வீடியோ தனுஷ் பிறந்தநாளில் வெளியாகி பட்டையை கிளப்பியது. கலைப்புலி S தாணுவின் வி கிரியேஷன்ஸ் தயாரித்த இந்த படத்தை மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். படத்தில் ரஜீஷா விஜயன் நாயகியாக நடிக்க நடிகர் லால், நட்டி நட்ராஜ், கௌரி கிஷன், லக்ஷ்மி பிரியா, யோகிபாபு ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடிக்கின்றனர்.

தனுஷ் நடிப்பில் உருவான ஜகமே தந்திரம் படத்தின் ரகிட ரகிட பாடல் வெளியானது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய இந்த பாடல் தனுஷின் பிறந்தநாளன்று வெளியானது குறிப்பிடத்தக்கது. சந்தோஷ் நாராயணன் இந்த பாடலுக்கு இசையமைத்துள்ளார்.

குழந்தைகளையே
தனது உலகமாக
மாற்றிக்கொண்ட
தாய்
உள்ளத்தில் இருந்து
ஒரு பாடல் .. @latharajnikanth
அற்புதம் !!! அன்புதானே எல்லாமே https://t.co/4ChYr51gAs

— Dhanush (@dhanushkraja) July 30, 2020