சுருளி என்ற கதாபாத்திரத்தில் நடிகர் தனுஷ் மிரட்டியிருக்கும் ஜகமே தந்திரம் திரைப்படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் எழுதி இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இத்திரைப்படத்திற்கு ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார்.Y NOT ஸ்டூடியோஸ் திரு.சசிகாந்த் இத்திரைப்படத்தை தயாரித்துள்ளார்.ஜகமே தந்திரம் திரைப்படத்தில் நடிகர் தனுஷுடன் இணைந்து புகழ்மிக்க ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ மற்றும் மலையாள நடிகர் ஜார்ஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நாளை (ஜூன் 18ஆம் தேதி) உலகம் முழுவதும் 17 மொழிகளில் நேரடியாக ரிலீசாகிறது ஜகமே தந்திரம் திரைப்படம்.
முன்னதாக வெளியான ஜகமே தந்திரம் படத்தின் டீசர் ,டிரைலர் ,பாடல்கள் என அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. ஜகமே தந்திரம் திரைப்படத்தை தியேட்டரில் கொண்டாடுவதற்காக ரசிகர்கள் காத்திருந்த நிலையில் நேரடியாக நெட்பிளிக்ஸ் OTT தளத்தில் நாளை வெளியாகிறது.
சில தினங்களுக்கு முன்பு பாடல் வெளியீடு குறித்து ட்விட்டர் ஸ்பேசில் பேசிய நடிகர் தனுஷ் “ஜகமே தந்திரம் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தயாரானாலும் கண்டிப்பாக நான் சுருளி கதாபாத்திரத்தில் நடிப்பேன்” என கூறியிருந்தார். ஏகத்துக்கும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும் ஜகமே தந்திரம் திரைப்படத்திலிருந்து தற்போது மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. ஜகமே தந்திரம் திரைப்படம் குறித்த சுவாரஸ்யமான தகவல்களையும் படப்பிடிப்பு அனுபவங்களையும் படக்குழுவினர் பகிர்ந்து கொள்ளும் இந்த மேக்கிங் வீடியோ தற்போது யூடியூபில் வெளியாகியுள்ளது.
மேலும் நாளை வெளியாகும் ஜகமே தந்திரம் திரைப்படத்திற்காக காமன் DPயும் வெளியிடப்பட்டுள்ளது. வெகு நாட்களாக காத்திருந்த ஜகமே தந்திரம் திரைப்படம் நாளை மதியம் 12.30 மணி அளவில் உலகம் முழுவதும் வெளியாவதால் ரசிகர்கள் அனைவரும் ரகிட ரகிட ரகிட என காத்திருக்கிறார்கள்.ஜகமே தந்திரம் திரைப்படத்தின் மரண மாஸ் மேக்கிங் வீடியோ கீழே உள்ள லிங்கில் காணலாம்.