தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் தனுஷ் முதல் முறை தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் நடித்துள்ள வாத்தி திரைப்படம் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் வெளியிட வருகிற பிப்ரவரி 17ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகிறது. முன்னதாக வருகிற பிப்ரவரி 8ம் தேதி வாத்தி திரைப்படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் இணைந்து தயாரிக்க, இயக்குனர் வெங்கி அட்லுரி இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள வாத்தி (SIR) திரைப்படத்தில் சம்யுக்தா கதாநாயகியாக நடிக்க, சமுத்திரக்கனி, சாய்குமார், தனிக்கெல்லா பரணி, கென் கருணாஸ் ஆகியோர் வாத்தி படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். J.யுவராஜ் ஒளிப்பதிவில், நவீன் நூலி படத்தொகுப்பு செய்ய, வாத்தி திரைப்படத்திற்கு ஜீவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
இந்நிலையில் நமது கலாட்டா சேனலுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் பேசிய நடிகை சம்யுக்தா தனது திரைப்பயண அனுபவங்கள் குறித்தும் வாத்தி திரைப்படத்தில் பணியாற்றியது குறித்தும் பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்து கொண்டார். வாத்தி திரைப்படத்தில் நடிகை சம்யுக்தா ஆசிரியை கதாபாத்திரத்தில் நடித்துள்ளதால், பிரேமம் படத்தின் மலர் டீச்சர் கதாபாத்திரத்தோடு சம்யுக்தாவின் வாத்தி பட கதாபாத்திரத்தை ஒப்பிட்டு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பதிவிட்டு வந்தனர்.
இதுகுறித்து “அடுத்த மலர் டீச்சர் நீங்கள் தான்!” என சோசியல் மீடியாவில் பேசி கொள்கிறார்களே? எனக் கேட்டபோது, “அய்யய்யோ அது யார் சொன்னது... மலர் மிகவும் ஐகானிக் கேரக்டர்… ஆனால் இது ஒரு சிம்பிளான கேரக்டர். என்னுடைய மீனாட்சி கேரக்டருக்கும் மலர் கேரக்டருக்கும் ஒற்றுமைகள் எதுவுமே கிடையாது. டீச்சர் என்பது தான் ஒற்றுமை. அங்கே டீச்சரும் மாணவரும் காதலிக்கிறார்கள். இங்கே டீச்சரும் டீச்சரும் காதலிக்கிறார்கள். எனவே வேறுபாடு இருக்கிறது.” என சம்யுக்தா தெரிவித்துள்ளார். சம்யுக்தாவின் அந்த முழு பேட்டி இதோ…