தமிழ் சினிமாவின் மிகச் சிறந்த நடிகராக விளங்கும் நடிகர் தனுஷ் நடிப்பில் சில தினங்களுக்கு முன்பு வெளிவந்த நானே வருவேன் திரைப்படம் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது. இதனை அடுத்து ராக்கி & சாணிக் காயிதம் படங்களின் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் தனுஷ் நடித்து வருகிறார்.
சமீபத்தில் கேப்டன் மில்லர் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனிடையே முதல்முறையாக பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லுரி இயக்கத்தில் தமிழ் & தெலுங்கு என இரு மொழிகளில் தனுஷ் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் வாத்தி (SIR).
சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடிக்க, சாய்குமார், தனிக்கெல்லா பரணி, கென் கருணாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் இணைந்து தயாரிக்கும் வாத்தி படத்திற்கு ஜீவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். J.யுவராஜ் ஒளிப்பதிவு செய்துள்ள வாத்தி திரைப்படத்திற்கு நவீன் நூலி படத்தொகுப்பு செய்கிறார்.
வாத்தி திரைப்படம் வருகிற டிசம்பர் 2ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. முன்னதாக வெளிவந்த வாத்தி படத்தின் டீசர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் வாத்தி திரைப்படத்தின் ஐரோப்பிய ரிலீஸ் உரிமையை 4 சீசன்ஸ் கிரியேஷன்ஸ் AS நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
We are happy to Announce #Vaathi / #SIR
— 4Seasons Creations AS (@4SeasonsCreati1) October 12, 2022
Europe release by @4SeasonsCreati1 get ready classes Start from 2nd Dec 2022!📕🖊️✨ #SIRMovieOn2ndDec #VaathiOn2ndDec @dhanushkraja #VenkyAtluri @iamsamyuktha_ @gvprakash @vamsi84 #SaiSoujanya @Fortune4Cinemas @SitharaEnts pic.twitter.com/PC9gg7EBal