தனது கடின உழைப்பாலும் விடாமுயற்சியாலும் தன்னிகரற்ற நடிகராக உயர்ந்து வரும் நடிகர் தனுஷ் அடுத்ததாக ராக்கி & சாணிக் காயிதம் படங்களின் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். அதிரடியான பீரியட் திரைப்படமாக தயாராகும் கேப்டன் மில்லர் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்ற வருகிறது.
இதனைத்தொடர்ந்து பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கும் புதிய படத்திலும் தனுஷ் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது . முன்னதாக தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லுரி இயக்கத்தில் முதல் முறையாக தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் வாத்தி (SIR).
சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடிக்க, சமுத்திரக்கனி, சாய்குமார், தனிக்கெல்லா பரணி, கென் கருணாஸ் ஆகியோர் வாத்தி படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் இணைந்து தயாரிக்கும் வாத்தி திரைப்படம் வருகிற பிப்ரவரி 17ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.
J.யுவராஜ் ஒளிப்பதிவில், நவீன் நூலி படத்தொகுப்பு செய்ய, வாத்தி திரைப்படத்திற்கு ஜீவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்நிலையில் வாத்தி திரைப்படத்தின் இரண்டாவது பாடலான “நாடோடி மன்னன்” பாடல் வருகிற ஜனவரி 17ஆம் தேதி காணும் பொங்கல் தினத்தன்று தனுஷ் ரசிகர்களுக்கு பொங்கல் பரிசாக ரிலீஸாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.