இந்திய சினிமாவின் இன்றியமையாத நடிகராக தொடர்ந்து பலவிதமான கதைக்களங்களில் விதவிதமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து, மிகச் சிறப்பாக நடித்து ஆகச்சிறந்த நடிகராக ரசிகர்களின் இதயங்களில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கும் நடிகர் தனுஷ் அடுத்ததாக ராக்கி மற்றும் சாணிக் காயிதம் படங்களின் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் தற்போது கதாநாயகனாக நடித்து வருகிறார்.

முன்னதாக முதல் முறை தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தனுஷ் நடித்துள்ள வாத்தி திரைப்படம் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட வருகிற டிசம்பர் 2ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. சித்தாரா என்டர்டெயின்மென்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள வாத்தி (தெலுங்கில் SIR) திரைப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அல்லூரி எழுதி இயக்கியுள்ளார்.

தனுஷுக்கு ஜோடியாக நடிகை சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடிக்கும் வாத்தி திரைப்படத்தில் சமுத்திரக்கனி, சாய் குமார், ஸ்ருதிகா, தனிக்கெல்லா பரணி, ஆடுகளம் நரேன், இளவரசு, ஹரிஷ் பெரடி, பிரவீனா ஆகியோர் முக்கிய இடங்களில் நடித்துள்ளனர். j.யுவராஜ் ஒளிப்பதிவில் நவீன் நூலி படத்தொகுப்பு செய்யும் வாத்தி திரைப்படத்திற்கு ஜீவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

வருகிற நவம்பர் 10ஆம் தேதி வாத்தி திரைப்படத்தின் முதல் பாடலாக தனுஷ் எழுத, ஸ்வேதா மோகன் பாடியுள்ள வா வாத்தி பாடல் வெளியாகவுள்ளது. இந்நிலையில் அதன் முன்னோட்டமாக இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் குமார் பியானோ வாசிக்க, வாத்தி படத்தின் வா வாத்தி பாடலை தனுஷ் பாடும் லைவ் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. வைரலாகும் அந்த வீடியோ இதோ…