தமிழ் சினிமா மற்றும் சின்னத்திரையின் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தேவ் ஆனந்த். இந்த நிலையில் நமது கலாட்டா தமிழ் சேனலுக்கு பிரத்யேக பேட்டி கொடுத்த நடிகர் தேவ் ஆனந்த் அவர்கள் தனக்கும் அஜித் குமார் அவர்களுக்குமான நட்பு குறித்து பேசினார். அப்படி பேசும் போது, “அஜித் சார் எனக்கு நல்ல நண்பர் ஆனால் அவரை சந்தித்தே கிட்டத்தட்ட 16 - 17 வருடங்களுக்கு மேல் ஆகின்றன” என்றார். தொடர்ந்து அவரிடம், “உங்களுக்கும் அஜித் குமார் அவர்களுக்கும் இந்த இணைப்பு எப்படி உருவானது?” என கேட்டபோது,
“இயக்குனர்கள் ஜேடி மற்றும் ஜெர்ரி ஒரு படம் இயக்குனர்கள் அல்லவா… உல்லாசம் என்ற படம் பண்ணும் போது, நான் அவருடைய (அஜித் குமார்) நண்பர்கள் எல்லோரும் நண்பர்கள் கதாபாத்திரத்தில் நடிக்கும் எல்லோரும் ஓரிடத்தில் உட்கார்ந்து இருந்தோம். படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் எல்லோரும் அஜித் குமாரை தேடிக் கொண்டிருக்கிறார்கள். அஜித் குமார் அவர்களுக்கு தொப்பியை முகத்திற்கு வைத்து மூடியபடி தூங்கிக் கொண்டிருக்கிறார், நான் ஒருவரிடம் சொன்னேன் "எழுப்புடா தூங்கிக் கொண்டிருக்கிறார்" என்றேன். அதற்கு அந்த நபர் "நான் எழுப்ப மாட்டேன் கத்துவார்" என்றார். என்னடா இது என்று நான் பார்த்துக் கொண்டிருந்த போது ஒரு அசிஸ்டன்ட் டைரக்டர் அங்கிருந்து ஓடி வருகிறார். நான் அவரிடம் கொஞ்சம் வெயிட் பண்ணுங்கள் நான் எழுப்புகிறேன் என சொல்லிவிட்டு நான் எழுப்பி, "அஜித் ஷாட் ரெடி ஆகிவிட்டது" என்றேன். எழுந்து FRESH ஆகிவிட்டு, “தேங்க்ஸ் நான் அஜித்” என்றார் “நான் தேவ்’ என கை கொடுத்தோம் அதிலிருந்து நட்பு உருவானது.
அதன் பிறகு ஏவிஎம்-ல் நிறைய முறை சந்தித்தோம். அவர் ஏவிஎம்-ல் இருந்து 100 அடி ரோடு கடந்து செல்லும்போது நான் மறுபுறம் பைக்கில் நின்று கொண்டிருப்பேன். என்னை பார்த்ததும் கைகாட்டி “தேவ் மச்சி ஆபீசுக்கு வா” என்று கூப்பிடுவார். அஜித்தை பார்த்துவிட்டு என்னை பார்த்ததும் உங்களுக்கு அஜித்தை தெரியுமா என்ற எல்லோரும் கேட்பார்கள்.. அதுவே எனக்கு ஒரு வித சங்கடமாக இருக்கும். அவர் கைகாட்டி விட்டுப் போய்விட்டார் இங்கே நிற்பவர்கள் எல்லாம் உங்களுக்கு அஜித் சார் தெரியுமா தெரியுமா என்று கேட்கிறார்கள் பின்னர் உடனே அங்கிருந்து வண்டி எடுத்துக் கொண்டு கிளம்பி விடுவோம். பின்னர் அவரது ஆபிஸ்க்கு அடிக்கடி போய் வருவோம்.
அந்த காலகட்டத்தில் என்ன ஆனது என்றால் ஒரு கட்டத்தில் உங்களுக்கு அஜித் சாரை நன்றாக தெரியுமே அவரிடமே நீங்கள் வாய்ப்பு கேட்கலாமே என்று எல்லோரும் என்னிடம் கேட்டார்கள். அஜித் சாரிடம் போய் நான் வாய்ப்பு கேட்டேன் என்றால் இதற்காகவா என்னிடம் பழகினாய் என்ற ஒரு எண்ணம் அவருக்குள் தோன்றிவிடும் அதற்காகவே நான் அங்கிருந்து விலகி வந்தேன். சரி வேண்டாம் இந்த காரணத்திற்காக அவருடன் இருக்கும் அந்த நட்பை இழக்க வேண்டாம் என்று நான் முடிவு செய்தேன்”
என தெரிவித்திருக்கிறார் இன்னும் பல முக்கிய விஷயங்களை நம்மோடு பகிர்ந்து கொண்ட நடிகர் தேவ் ஆனந்தின் அந்த முழு பேட்டியை கீழே உள்ள லிங்கில் காணுங்கள்.