டெல்லியில் அழகு நிலையத்தில் உல்லாசத்தில் ஈடுபடுத்திய 4 சிறுமிகள் மீட்கப்பட்டனர்.
டெல்லி வடக்கில் உள்ள புராரிப் பகுதியில் “18 ப்ளஸ்” என்ற பெயரில் அழகு நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த அழகு நிலையத்தின் இணையதள பக்கத்தில் சில அழகான பெண்களின் புகைப்படங்கள் பதியப்பட்டு, அதன் அருகே, அந்த பெண்களுக்கான விலைப் பட்டியலும் இணைக்கப்பட்டிருந்தது.
இந்த தகவல், டெல்லி மகளிர் போலீசார் கவனத்திற்கு வந்தது. இதனையடுத்து, டெல்லி குற்றப்பிரிவு காவல் துறையினரின் உதவியுடன், அதிரடியாக இறங்கிய போலீசார், அங்குச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு பாலியல் தொழில் நடப்பதை உறுதி செய்தனர்.
மேலும், அழகு நிலையத்தில் உல்லாசத்தில் ஈடுபடுத்திய 4 சிறுமிகளையும் போலீசார் மீட்டனர். இதனையடுத்து, அழகு நிலைய ஊழியர்களைக் கைது செய்த போலீசார், இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.