நாளுக்கு நாள் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கும் இயக்குனர் பா ரஞ்சித் சீயான் விக்ரம் கூட்டணியின் தங்கலான் திரைப்படத்தின் ஸ்பெஷலான SNEAK PEEK GLIMPSE வீடியோ ஒன்றை பிரபல ஆங்கில நடிகர் டேனியல் கால்டகிரோன் வெளியிட்டுள்ளார். முன்னதாக ஓரிரு தினங்களுக்கு முன்பு தங்கலான் திரைப்படத்தின் டப்பிங்கில் ஈடுபட்டிருக்கும் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட ஆங்கில நடிகர் டேனியல் கால்டகிரோன் தற்போது அதிலிருந்து ஒரு சிறிய வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். ஏற்கனவே வெளியிட்ட புகைப்படத்தில் இருக்கும் ஸ்கிரீனில் தங்கலான் திரைப்படத்தின் ஒரு முக்கிய காட்சியின் ஷாட் இருந்தது. அதில் சீயான் விக்ரமுக்கு பின்னால் நடிகர் டேனியல் கால்டகிரோன் துப்பாக்கி ஏந்தியபடி நின்றிருந்தார். தற்போது அந்த ஷாட்டின் சில நொடிகள் கொண்ட வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். சமூக வலைதளங்களில் வைரலாகி தங்கலான் ஸ்பெஷல் டப்பிங் வீடியோ இதோ…
இதுவரையில் இந்திய சினிமாவில் பார்த்திராத அளவிற்கு மிகப்பெரிய படமாக மிகவும் அழுத்தமான கதைக்களம் கொண்ட ஒரு எமோஷனல் பீரியட் ஆக்சன் திரில்லர் படமாக ரசிகர்களுக்கு பெரிய விஷுவல் ட்ரீட்டாக வர இருக்கிறது தங்கலான் திரைப்படம். இந்திய சினிமாவின் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவரான சீயான் விக்ரமும் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவரான பா.ரஞ்சித் அவர்களும் முதல்முறையாக இணைந்து இருக்கும் திரைப்படம் தான் இந்த தங்கலான். கதையின் நாயகனாக தங்கலான் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சீயான் விக்ரம் உடன் இணைந்து மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி, ஹரி கிருஷ்ணன், டேனியல் கால்டகிரோன் ஆகியோர் தங்கலான் திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். வருகிற 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26 ஆம் தேதி குடியரசு தின வெளியீடாக தங்கலான் திரைப்படம் மிகப் பிரம்மாண்டமாக உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் எனவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
1800-களின் காலகட்டத்தில் கேஜிஎஃப்-ல் நடைபெற்ற வரலாற்று சம்பவத்தை மையமாக வைத்து பீரியட் ஆக்சன் படமாக உருவாகி இருக்கும் தங்கலான் திரைப்படத்தில் கிஷோர் குமார் ஒளிப்பதிவில், செல்வா.RK படத்தொகுப்பு செய்ய, GV.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். தங்கலான் திரைப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது இறுதி கட்டப் பணிகள் அனைத்தும் முழு வீச்சில் நடைபெற்று முழுவீச்சில் வருகின்றன. கடந்த சில தினங்களுக்கு முன்பு ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த தங்கலான் திரைப் படத்தின் டீசர் வெளிவந்து ஒட்டு மொத்த இந்திய சினிமா ரசிகர்களையும் மிரள வைத்தது. டீசரின் ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு ஃபிரேமும் உலக தரத்தில் ஒரு பிரம்மாண்டமான அதிரடி பீரியட் ஆக்சன் படமாக தங்கலான் இருக்கும் என்பதை உறுதி செய்துள்ளது. இந்திய சினிமா ரசிகர்கள் இதுவரை பார்த்திராத அட்டகாசமான திரை அனுபவத்தை கொடுக்கும் வகையில் 3D தொழில்நுட்பத்தில் பிரம்மாண்டமாக தயாராகி வரும் தங்கலான் திரைப்படத்தை PAN INDIA படமாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் வெளியிட பட குழுவினர் திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.