தற்போது இருக்கும் சினிமா ட்ரெண்டில் வெப் சீரிஸுக்கு என தனி ரசிகர்கள் உண்டு. டேனியல் பாலாஜி, சோனியா அகர்வால், ஜெயபிரகாஷ் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் வெப் தொடர் காட்மேன். கிரைம் திரில்லர் பாணியில் உருவாகியிருக்கும் இந்த தொடரை பாபு யோகேஸ்வரன் இயக்கியிருக்கிறார்.

இவர் இதற்குமுன் ஜெயம் ரவி நடிப்பில் தாஸ் என்ற படத்தை இயக்கினார். மேலும் தற்போது விஜய் ஆண்டனி வைத்து தமிழரசன் என்ற படத்தை இயக்கி வருகிறார். வடசென்னை, பிகில் போன்ற படங்களில் நடித்த டேனியல் பாலாஜி, இந்த வெப் சீரிஸில் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வெப் சீரிஸ் ஜூன் மாதம் 12-ம் தேதி Zee5 தளத்தில் வெளியாக இருக்கிறது. இந்த வெப் சீரிஸின் போஸ்டர் வெளியாகி வைரலானது. தற்போது இதன் டீஸர் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. டீஸரை பார்க்கையில் நிச்சயம் இந்த தொடர் குறித்து சர்ச்சைகள் கிளம்பும் என்று கமெண்ட் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

Money, Politics, Sex and God, who is going to win this ultimate #UnholyPowerGame? Watch #Godman, premiering June12th only on #ZEE5 #GodOfAllCrimes #GodmanOnZEE5 #StayHomeToSuperEntertainment pic.twitter.com/BVGHoubnkm

— Daniel Balaji (@DanielBalaje) May 26, 2020