தமிழ் சினிமாவில் கவலை வேண்டாம், துருவங்கள் பதினாறு ஆகிய படங்கள் மூலம் சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்த யாஷிகா ஆனந்த். கடந்த 2018 கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தில் நடித்து ரசிகர்களுக்கு பரவலாக அறியப்பட்டார். கவர்ச்சியில் மிரட்டும் யாஷிகா ஆனந்த் க்கு தனி ரசிகர் கூட்டமே வளர்ந்தது. பின் யாஷிகா ஆனந்த்க்கு கவர்ச்சியான கதாபாத்திரங்களே சினிமாவில் வாய்ப்புகள் வந்தவண்ணம் இருந்தது. பின் விஜய் தொலைகாட்சியில் ஒளிப்பரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியளராக பங்கெடுத்து வெகுஜன மக்களுக்கு அறியப்பட்டார் யாஷிகா ஆனந்த். பின் தமிழ் சினிமாவில் தொடர்ந்து நடித்து வந்தார். யாஷிகா தமிழில் கதாநாயகியாக எஸ் ஜே சூர்யா படமான ‘கடமையை செய்’ மற்றும் ஜாம்பி ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

கடந்த 2021 ம் ஆண்டு மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் யாஷிகா ஆனந்த் தனது நண்பர்களுடன் காரில் புதுச்சேரியில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த போது கார் நிலை தடுமாறி சாலை நடுவே இருக்கும் தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் யாஷிகாவின் தோழி பவானி சம்பவ இடத்திலே உயிரிழந்தார். கார் ஒட்டிய யாஷிகாவிற்கு பலத்த காயம் ஏற்பட்டது. பின் தீவிர சிகிச்சையில் இருந்த யாஷிகா குணமடைந்து வர ஒருபுறம் ரசிகர்கள் யாஷிகாவை கடுமையாக விமர்சித்து வந்தனர். மேலும் விபத்தின் அடிப்படையில் யாஷிகா மீது, அதிவேகமாக கார் ஒட்டியது, உயிர்சேதம் ஏற்படுத்தியது உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தது மாமல்லபுரம் காவல்துறை.

இந்த விபத்து முடிந்து பூரண குணமடைந்த யாஷிகா தற்போது திரைத்துறையில் கவனம் செலுத்தி வந்த நிலையில் அதிவேகமாக கார் ஒட்டி உயிர் சேதம் நடத்திய யாஷிகாவின் வழக்கு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நடைபெற்றது. கடந்த 21ம் தேதி வழக்கில் ஆஜராகும் படி யாஷிகாவிற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கில் யாஷிகா ஆஜராகாததால் அவருக்கு நீதிமன்றம் தற்போது பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் வருகிறது ஏப்ரல் 25 ம் தேதி நடைபெறவிருக்கும் வழக்கில் யாஷிகா ஆனந்த் ஆஜராகவில்லை என்றால் அவரை கைது செய்யும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த செய்தி தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.