தளபதி 68 படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் சதீஷின் காஞ்சுரிங் கண்ணப்பன் திரைப்படத்திலிருந்து டென்ஷன் கான் செலிப்ரேஷன் சாங் என்ற புதிய பாடல் லிரிக் வீடியோ வெளியானது. இயக்குனர் செல்வின் ராஜ் சேவியர் இயக்கத்தில் நடிகர் சதீஷ் மற்றும் ரெஜினா கெஸ்ஸென்ரா இணைந்து நடித்திருக்கும் கலக்கலான ஹாரர் காமெடி திரைப்படம் தான் காஞ்சூரிங் கண்ணப்பன். ரசிகர்கள் விரும்பும் பக்கா ஹாரர் காமெடி படமாக உருவாகி இருக்கும் இந்த காஞ்சுரிங் கண்ணப்பன் திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா அவர்கள் இசையமைத்திருக்கிறார். அந்த வகையில் காஞ்சுரிங் கண்ணப்பன் திரைப்படத்திலிருந்து புதிய பாடலாக Tension Gone Uh Celebration Song Uh என்ற புதிய பாடலின் லிரிக்ஸ் வீடியோ தற்போது வெளிவந்துள்ளது. பாடல் ஆசிரியர் விக்னேஷ் ராமகிருஷ்ணா எழுதி இருக்கும் இந்த பாடலை யுவன் சங்கர் ராஜா மற்றும் வைசாக் இருவரும் இணைந்து பாடி இருக்கின்றனர். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள காஞ்சுரிங் கண்ணப்பன் திரைப்படத்தின் Tension Gone Uh Celebration Song Uh பாடல் லிரிக் வீடியோ இதோ…
தளபதி விஜய் தனது திரை பயணத்தில் 68வது திரைப்படமாக உருவாகும் தளபதி 68 திரைப்படத்தில் முதல்முறையாக இயக்குனர் வெங்கட் பிரபு உடன் இணைந்து இருக்கிறார். விறுவிறுப்பான ஆக்ஷன் திரைப்படமாக தயாராகி வரும் இந்த தளபதி 68 திரைப்படத்தை தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஏஜிஎஸ் என்டர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. ஏற்கனவே தளபதி விஜயின் பிளாக்பஸ்டர் படமான பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் என்ற மீண்டும் இரண்டாவது முறையாக தளபதி விஜய் உடன் தளபதி 68 திரைப்படத்தில் இணைந்துள்ளது. இதனிடையே ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் அடுத்த அட்டகாசமான படைப்பாக காஞ்சுரிங் கண்ணப்பன் திரைப்படம் வருகிற டிசம்பர் 8ம் தேதி உலகம் எங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இயக்குனர் செல்வின் ராஜ் சேவியர் இயக்கத்தில் சதீஷ் மற்றும் ரெஜினா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இந்த காஞ்சுரிங் கண்ணப்பன் திரைப்படத்தில் நாசர், ஆனந்த்ராஜ், சரண்யா பொன்வண்ணன், விடிவி கணேஷ், ரெடின் கிங்ஸ்லி, பெனிஸ்டிக் கேரட், நமோ நாராயணா மற்றும் ஆதித்யா கதிர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
S.யுவா ஒளிப்பதிவில் பிரதீப் E ராகவ் படத்தொகுப்பு செய்திருக்கும் காஞ்சூரிங் கண்ணப்பன் திரைப்படத்திற்கு மோகனம் மகேந்திரன் கலை இயக்குனராக பணியாற்றியிருக்கிறார் விக்ரம் மற்றும் லியோ படங்களின் பாடல் ஆசிரியர் விஷ்ணு எவன் மற்றும் விக்னேஷ் ராமகிருஷ்ணா ஆகியோர் காஞ்சுரிங் கண்ணப்பன் படத்தின் பாடல்களை எழுதி இருக்கின்றனர். பொதுவாக குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் என அனைவருக்கும் கெட்ட கனவுகளில் இருந்து விடுபட மனரீதியான ஒரு மாற்றத்தை கொடுக்கும் ஒரு பொருளாக ட்ரீம் கேட்சர் என்ற ஒன்று சுவற்றில் மாற்றப்படும் வழக்கம் பலரிடமும் இருப்பதை நாம் பார்த்திருப்போம். அந்த பொருளை கதைக்களமாக கொண்டிருக்கும் படம் தான் இந்த கான்ஜுரிங் கண்ணப்பன். ஒரு அமானுஷ்யம் நிறைந்த ட்ரீம் கேட்சரின் ஒரு இறகை பிடுங்கிவிடும் சதீஷ் அதன் பிறகு ஒரு கொடூரமான கெட்ட கனவை அனுபவிக்கிறார். அதில் ஒரு பாழடைந்த கோட்டைக்கு சென்று வருகிறார். தொடர்ச்சியாக அந்த கனவு அவருக்கு தினம் தினம் தோன்றி மிகுந்த மன உளைச்சலை கொடுக்கிறது. இதற்காக அவர் என்னெல்லாம் செய்கிறார். மேலும் யாரெல்லாம் அந்த ட்ரீம் கேட்சரின் இறகுகளை பிடுங்குகிறார்கள். அவர்களுக்கெல்லாம் என்ன ஆனது? என்ற நகைச்சுவையான திரில்லர் படமாக இந்த காஞ்சுரிங் கண்ணப்பன் திரைப்படம் ரசிகர்களை வந்து சேர இருக்கிறது.