பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் மரணம் இந்திய சினிமா ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.கடந்த சில மாதங்களாக மனஅழுத்ததில் இருந்த 34 வயதான சுஷாந்த் சிங் கடந்த ஜூன் 14ஆம் தேதி மும்பை பண்ட்ராவில் உள்ள தனது இல்லத்தில் தற்கொலை செய்துகொண்டார்.இந்த செய்தி ஒட்டுமொத்த ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது.எதற்காக தற்கொலை செய்துகொண்டார் என்ற காரணம் தெரியவில்லை இது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
இவரது மரணம் குறித்து பலரிடமும் விறுவிறுப்பாக விசாரணை நடித்து வருகின்றனர்.பாலிவுட் இண்டஸ்ட்ரியில் இருக்கும் வாரிசு அரசியல் தான் சுஷாந்தின் மரணத்திற்கு காரணம் என்று பலரும் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.பல வெளிவராத விஷயங்களை பல பிரபலங்கள் பகிர்ந்து வருகின்றனர்.சுஷாந்த் போன்ற ஒரு நடிகரை பாலிவுட் பிரபலங்கள் கண்டுகொள்ளாதது ஏன் என்றும் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
சுஷாந்த் நடித்துள்ள கடைசி படமான Dil Bechara படத்தை அறிமுக இயக்குனர் Mukesh Chhabra இயக்கியுள்ளார்.2012-ல் John Green எழுதிய The Fault in Our Stars என்ற புத்தகத்தை தழுவி இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.Sanjana Sanghi இந்த படத்தின் மூலம் ஹிந்தியில் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.Saif Ali Khan இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படம் நேரடியாக ஹாட்ஸ்டார் OTT தளத்தில் வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.இந்த படம் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ஜூலை 24 முதல் ஸ்ட்ரீம் ஆகும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சுஷாந்தின் மரணம் குறித்து பல கோணங்களில் விசாரணைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.திரைத்துறையில் உள்ள பலரையும் போலீஸ் விசாரித்து வருகின்றனர்.சுஷாந்த் சிங் தூக்கிட்டு தான் தற்கொலை செய்துகொண்டாரா என்பதை நிரூபணம் செய்ய தற்போது அவர் தூக்கிட பயன்படுத்திய துணியை தடயவியல் நிபுணர்களிடம் டெஸ்டிற்கு அனுப்பப்பட்டுள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது.இந்த டெஸ்டின் மூலம் சுஷாந்த் உண்மையில் தற்கொலை செய்துகொண்டார் இல்லையா என்பது குறித்த குழப்பங்கள் நிறைவுக்கு வரும் என்று தெரிவிக்கின்றனர் நிபுணர்கள்.இந்த துணி சுஷாந்தின் எடையை தாங்குமா இல்லையா என்பது குறித்து தடயவியல் நிபுணர்கள் ஆராய்ந்து இன்னும் சில தினங்களில் ரிசல்ட்டை வெளியிடுவார்கள் என்று தெரிகிறது.இதனை தவிர உள்ளுறுப்பு சோதனையம் செய்யப்பட்டுள்ளது இதன் மூலம் அவரது உடம்பில் போதைப்பொருட்கள் அல்லது விஷப்பொருட்கள் செலுத்தப்பட்டிருந்தால் அதையும் கண்டுபிடித்து விடலாம் என்று தெரிவித்துள்ளனர்.சுஷாந்தின் தற்கொலை உண்மையிலேயே தற்கொலை தானா இல்லை இதற்கு பின் ஏதேனும் மர்மம் உள்ளதா என்பது இன்னும் சில நாட்களில் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.