ஆகச் சிறந்த நடிகராக படத்திற்கு படம் தரமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து வெரைட்டியான கதை களங்களில் நடித்து தொடர்ந்து ரசிகர்களை மகிழ்வித்து வரும் நடிகர் சீயான் விக்ரம் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் கோப்ரா. பல அட்டகாசமான கெட்டப்புகளில் விக்ரம் நடித்த கோப்ரா திரைப்படம் ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பை பெற்றது.
அடுத்ததாக முதல் முறை இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் #Chiyaan61 திரைப்படத்தில் விக்ரம் நடிக்கவுள்ளார். ஸ்டூடியோ கிரீன் சார்பில் தயாரிப்பாளர் K.E.ஞானவேல் ராஜா தயாரிப்பில் கேஜிஎப் கதை களத்தை மையப்படுத்தி 3டி தொழில்நுட்பத்தில் பிரம்மாண்டமாக தயாராகும் இப்படத்தின் பணிகள் சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது.
முன்னதாக இயக்குனர் மணிரத்னத்தின் கனவு திரைப்படமாக தயாராகியிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஆதித்த கரிகாலன் எனும் முன்னணி கதாபாத்திரத்தில் விக்ரம் நடித்துள்ளார். வருகிற செப்டம்பர் 30ஆம் தேதி பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் உலகெங்கும் பல மொழிகளில் திரையரங்குகளில் ரிலீஸாக உள்ளது.
தனது ரசிகர்கள் தன் மீது வைத்திருக்கும் அன்பைப் போலவே ரசிகர்களையும் அளவுகடந்து நேசிக்கும் கலைஞனாக திகழும் நடிகர் விக்ரம் தன்னை காண விரும்பிய ரசிகைக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் அவரை நேரில் சந்தித்து பேசி புகைப்படங்கள் எடுத்துக் கொண்டதோடு செல்ஃபி எடுத்தும் சந்தோஷ கடலில் மூழ்கடித்துள்ளார். தனது ரசிகையுடன் சீயான் விக்ரம் இருக்கும் அந்த வைரல் வீடியோ இதோ…