பெரும் எதிர்பார்ப்புகளோடு ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த சீயான் விக்ரம் & கௌதம் வாசுதேவ் மேனனின் துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியானது. தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகர்களில் ஒருவராகவும் இந்திய சினிமாவில் சிறந்த நடிகர்களில் ஒருவராகவும் தொடர்ந்து படத்திற்கு படம் வித்தியாசமான கதை களங்களையும் நல்ல கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து ஆகச் சிறந்த நடிகராக ரசிகர்களின் இதயங்களை வென்றவர் நடிகர் சீயான் விக்ரம். கடைசியாக இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலனாக மிரட்டிய சீயான் விக்ரம் நடிப்பில் அடுத்தடுத்து அதிரடியான திரைப்படங்கள் வெளிவர இருக்கின்றன. இயக்குனர் பா.ரஞ்சித் அவர்களின் இயக்கத்தில் முதல் முறையாக சீயான் விக்ரம் நடித்துள்ள தங்கலான் திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்த நிலையில் தொடர்ந்து இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இதனிடையே நீண்ட காலமாக சீயான் விக்ரம் நடிப்பில் ரிலீஸுக்காக காத்திருந்த திரைப்படம் தான் துருவ நட்சத்திரம். தமிழ் சினிமாவில் தனக்கென தனி பாணியில் பக்கா ஸ்டைலான படங்களை கொடுத்து வரும் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் முதல் முறை சீயான் விக்ரம் நடித்த திரைப்படம் தான் துருவ நட்சத்திரம்.சீயான் விக்ரமுடன் இணைந்து ரிது வர்மா மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகிகளாக நடிக்க, இயக்குனர் பார்த்திபன், சிம்ரன், திவ்யதர்ஷினி-DD , விநாயகன், அர்ஜுன் தாஸ், ராதிகா சரத்குமார், வம்சி கிருஷ்ணா, சதீஷ் கிருஷ்ணன், முன்னா சைமன், மாயா கிருஷ்ணன், அபிராமி வெங்கடாசலம் ஆகியோர் துருவ நட்சத்திரம் திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். கடந்த ஆறு ஆண்டுகளில் வெவ்வேறு கட்டங்களாக பலமுறை படப்பிடிப்புகள் நடைபெற்று கடந்த 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்தது.
ஒன்றாக என்டர்டைன்மென்ட், கொண்டாடுவோம் என்டர்டைன்மென்ட் & எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள துருவ நட்சத்திரம் திரைப்படம் ரிலீஸாக இருப்பதாகவும் அதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் சமீபத்தில் அறிவித்திருந்தார். எனவே எப்போது ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என ஒட்டு மொத்த சினிமா ரசிகர்களும் ஆவலோடு காத்திருக்கும் நிலையில், தற்போது துருவ நட்சத்திரம் திரைப்படத்திற்கு சென்சாரில் U/A சான்று வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் தற்போது துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி பட குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. பக்கா ஆக்சன் பிளாக் திரைப்படமாக வருகிற நவம்பர் 24ஆம் தேதி சீயான் விக்ரமின் துருவ நட்சத்திரம் திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது விரைவில் அதற்கான அனைத்து பிரமோஷன் பணிகளும் தொடங்கும் எனவும் தெரிகிறது. துருவ நட்சத்திரம் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவிக்கும் வகையில் பட குழு அட்டகாசமான புதிய டீசர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதிரடியான அந்த டீசர் இதோ…