இந்திய சினிமாவின் குறிப்பிடப்படும் நடிகர்களில் ஒருவராகவும் பல கோடி ரசிகர்களின் அபிமான கதாநாயகனாகவும் திகழும் சீயான் விக்ரம் தொடர்ந்து பல விதமான கதாபாத்திரங்களில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்தவகையில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடித்த மகான் திரைப்படம் கடந்த பிப்ரவரி 10 தேதி, நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

அடுத்ததாக முதல் முறை இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ள சீயான் விக்ரம் முன்னதாக இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் இந்திய திரை உலகின் பிரம்மாண்ட படைப்பாக தயாராகி வரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஆதித்த கரிகாலன் எனும் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இதனிடையே செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் S.S.லலித்குமார் தயாரிப்பில் டிமான்டி காலனி , இமைக்கா நொடிகள் படங்களின் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் பல விதமான வித்தியாசமான கெட்டப்புகளில் மிரட்டலாக சீயான் விக்ரம் நடித்துள்ள திரைப்படம் கோப்ரா. ஹாரிஸ் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ள கோப்ரா படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

சீயான் விக்ரமுக்கு ஜோடியாக கேஜிஎஃப் பட கதாநாயகி ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்க மியா ஜார்ஜ், இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், ரோஷன் மேத்யூ, ஷாஜி சென், பத்மப்ரியா, மிருணாளினி ரவி, ரோபோ ஷங்கர், மாஸ்டர் பூவையார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் இர்ஃபான் பதான் மிரட்டலான வில்லனாக நடித்துள்ளார்.

இந்நிலையில் கோப்ரா திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை இயக்குனர் அஜய் ஞானமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். கோப்ரா படத்தின் ரிலீஸ் குறித்து ரசிகர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, "வருகிற மே 26-ம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் இன்னும் மூன்று மாதங்களே இருக்கிறது" என்றும் தெரிவித்துள்ளார். இயக்குனர் அஜய் ஞானமுத்துவின் அந்த வைரல் ட்வீட் இதோ...

Planning May 26th!! 3 months to go 🔥😊 https://t.co/kPXKr9Lw7w

— Ajay Gnanamuthu (@AjayGnanamuthu) February 26, 2022