வித்தியாசம் என்ற பெயருக்கு மறுவார்த்தையாக தமிழ் தொலைக்காட்சிகளில் வலம் வருவது விஜய் டிவி.இந்த தொலைக்காட்சியில் வேலைபார்த்த பலரும் தற்போது சினிமாவில் பிரபலன்களாக உள்ளனர்.சிவகார்த்திகேயன்,சந்தா
மேலும் கலக்கப்போவது யாரு,சூப்பர் சிங்கர் உள்ளிட்ட தொடர்களின் மூலம் தமிழகத்தில் மூலை முடுக்கில் இருக்கும் திறமைகளையும் கண்டுபிடிக்க விஜய் டிவி தவறுவதில்லை.பிக்பாஸ்,ஜோடி போன்ற பல ரியாலிட்டி ஷோக்களையும் புதுமையான பல நிகழ்ச்சிகளையும் தற்போது வரை கொடுத்து வருகிறது விஜய் டிவி.விஜய் டிவியின் மற்றுமொரு முக்கிய அம்சம் தொடர்கள்.
விஜய் டிவி பல வெற்றி தொடர்களை தந்து ரசிகர்களிடம் விஜய் டிவி தொடர்களுக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்துள்ளது.தற்போதும் விஜய் டிவியின் தொடர்கள் TRP-யில் கலக்கி வருகின்றன.விஜய் டிவியின் சூப்பர்ஹிட் தொடரான சின்னத்தம்பி தொடரில் நடித்து பிரபலமானவர் ஸ்வேதா வெங்கட்.இவர் கவண் படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்து அசத்தியிருப்பார்.
சின்னத்தம்பி தொடரில் இவரது கேரக்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.தற்போது இவரது வளைகாப்பு புகைப்படங்கள் வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.இவருக்கு ரசிகர்களும்,பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.