லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்து உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். ஏப்ரல் மாதம் 9-ம் தேதி வெளியாகும் இந்த படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு உள்ளது. படத்தின் விநியோக உரிமையை செவென் ஸ்க்ரீன் ஸ்டுடியோ கைப்பற்றியுள்ளதாக அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.
படத்தின் முதல் சிங்கிளான ஒரு குட்டி கதை பாடல் வெளியாகி ட்ரெண்டானது. அருண் ராஜா எழுதிய இப்பாடல் வரிகளுக்கு விஜய் குரல் தந்துள்ளார். இப்படத்தில், மாளவிகா மோகனன், ஸ்ரீமன், சாந்தனு, அர்ஜுன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீநாத், நாகேந்திர பிரசாத், ரமேஷ் திலக் ஆகியோர் பலர் நடிக்கின்றனர். அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். 129 நாட்கள் கொண்ட ஷூட்டிங் சமீபத்தில் முடிந்தது.
தற்போது இந்த படத்தில் நடித்த நடிகர் சேத்தன் படம் உருவான விதம் குறித்தும், படத்தில் பணிபுரிந்த அனுபவம் குறித்தும் பேசியுள்ளார். அப்போது கூறுகையில், விஜய் சாருடன் பணிபுரிந்த அனுபவம் மறக்கவே முடியாது. இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் ஏற்கனவே கைதி படத்தில் பணிபுரிந்துள்ளேன். எடுக்கும் காட்சிகளை மிகவும் தெளிவாக எடுப்பார். பொதுவாக விஜய் சார் அமைதியாக இருப்பார், அதிகம் பேசமாட்டார் என்று கேள்வி பட்டிருக்கிறேன். என் மனைவி பிகில் படத்தில் பணிபுரிந்ததால் அந்த மைன்ட் செட்டில் இருந்தேன். ஆனால் அதை விஜய் உடைத்தார். மிகவும் எளிமையாக இருந்தார்.
ஒரு நாள் படப்பிடிப்பின் போது என் மகள் பிகில் பாடலுக்கு நடனமாடிய வீடியோவை காண்பித்தேன். எங்களை விட பிரமாதாக ஆடியுள்ளார் என்று பாராட்டினார். இதை நீங்களே என் மகளிடம் கூறினால் மிகவும் சந்தோஷப்படுவாள் என்று கூறியதற்கு சரி என்றார். தொலைபேசி வாயிலாக என் மகளை தொடர்பு கொண்ட போது, நான் தான் பிராங்க் செய்கிறேன் என்று விளையாட்டியாக எண்ணினாள் என் மகள். இதுமட்டுமல்லாமல் அவர் நடித்த மெட்டி ஒலி சீரியல் அனுபவம் குறித்தும் கலாட்டா குழுவுடன் பகிர்ந்து கொண்டார்.