இந்திய திரையுலகின் பிரபலமான டான்ஸ் கோரியோகிராபராக திகழ்பவர் பிருந்தா மாஸ்டர். 90 காலகட்டத்தில் இருந்து தற்போது வரை பல முன்னணி நடிகர் நடிகைகளின் படங்களில் கோரியோகிராபராக பல புரிந்து இருக்கிறார். படங்களில் உதவி டான்ஸ் மாஸ்டராக வேலை பார்த்து இருந்த இவருக்கு சுந்தர் சி-ன் உள்ளத்தை அள்ளித்தா படத்தின் மூலம் தான் டான்ஸ் மாஸ்டராக பணிபுரியும் வாய்ப்பு எட்டியது.
அதற்கு பிறகு இவர் பல வெற்றி படங்களில் டான்ஸ் மாஸ்டராக பணிபுரிந்தார். இவர்களுடைய குடும்பமே நடனக் கலையில் கை தேர்ந்தவர்கள். 1995-ம் ஆண்டு உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில் வெளியான நம்மவர் படத்தில் நடித்திருந்தார்.
மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மரக்கர் அரபிக்கடலின்டே சிம்மம். இயக்குனர் ப்ரியதர்ஷன் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார். 16-ம் நூற்றாண்டில் வாழ்ந்த குஞ்சலி மரைக்காயர் வாழ்க்கையை தழுவி இப்படம் உருவாகியுள்ளது. குஞ்சலி மரைக்காயர் என்கிற முகம்மது போர்த்துக்கீசியர்களை எதிர்த்து போரிட்டவர். இத்திரைப்படத்தில் பிரணவ் லால், அர்ஜுன், சுனில் ஷெட்டி, பிரபு, மஞ்சு வாரியர், சுஹாசினி, கீர்த்தி சுரேஷ், கல்யாணி பிரியதர்ஷன், நெடுமுடி வேனு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். திரு இப்படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.
இந்நிலையில் கேரளாவின் 50-வது மாநில விருது விழாவில் மூன்று விருதினை குவித்தது இப்படம். சிறந்த டப்பிங், சிறந்த நடன இயக்கம், ஸ்பெஷல் ஜூரி விருது (VFX) எனும் மூன்று பிரிவுகளில் விருதை வென்றது. சிறந்த நடன இயக்கத்துக்கான விருதினை பிரசன்னா மற்றும் பிருந்தா பெற்றுள்ளனர். இச்செய்தி அறிந்த திரைப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் டான்ஸ் மாஸ்டர் பிருந்தாவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
நடன இயக்குனராக இருக்கும் பிருந்தா இயக்குனராக களமிறங்கவுள்ள திரைப்படம் ஹே சினாமிகா. துல்கர் சல்மான் ஹீரோவாக நடிக்கவிருக்கும் இந்த படத்தில் காஜல் அகர்வால் மற்றும் அதிதி ராவ் ஹைதாரி முக்கிய ரோலில் நடிக்கவுள்ளனர். கோவிந்த் வசந்தா இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளார். வானம் கொட்டட்டும் படத்தில் தனது ஒளிப்பதிவு மூலம் ஈர்த்த ப்ரீதா ஜெயராம் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்யவுள்ளார். பிருந்தா திரைப்பயணத்தில் இந்த ஹே சினாமிகா திரைப்படம் முக்கிய திருப்பமாக இருக்கும் என்று கூறலாம்.