தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திர நாயகனாகவும் பாக்ஸ் ஆஃபீஸ் சக்கரவர்த்தியாகவும் திகழும் தளபதி விஜய் முதல் முறை தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகும் வாரிசு திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். முன்னணி தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாகும் வாரிசு திரைப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிக்கிறது.
சில வாரங்களுக்கு முன் பூஜையுடன் வாரிசு திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது.தளபதி விஜயுடன் இணைந்து நடிகை ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்க, சரத்குமார், ஜெயசுதா, பிரகாஷ் ராஜ், இளைய திலகம் பிரபு, ஷியாம், சங்கீதா, யோகிபாபு, பிக்பாஸ் சம்யுக்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். வாரிசு திரைப்படத்திற்கு தமன்.S இசையமைக்கிறார்.
முன்னதாக தளபதி விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படத்தில் அனிருத் இசையில் வெளியான பாடல்கள் அனைத்தும் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பி வைரல் ஹிட்டடித்தன. குறிப்பாக அரபிக் குத்து பாடலும் அதில் தளபதி விஜயின் நடனமும் வேற லெவல் ட்ரெண்டானது. பல முன்னணி பிரபலங்களும் கதாநாயகிகளும் அந்தப் பாடலுக்கு நடனம் ஆடும் இன்ஸ்டாகிராம் வீடியோக்கள் வைரலாகின.
இந்நிலையில் தற்போது மதுரையின் உசிலம்பட்டியில் இருக்கும் தனியார் பள்ளி ஒன்றிற்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பிரபல பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் பள்ளிக் குழந்தைகளுடன் இணைந்து அரபிக் குத்து மற்றும் ஜாலியோ ஜிம்கானா ஆகிய பாடல்களுக்கு நடனம் ஆடிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன. அந்த வீடியோக்கள் இதோ…
Actress #KatrinaKaif vibing to #ArabicKuthu with kids at mountain view school.
— North Vijay Fans (@NorthVijayFans) September 25, 2022
Never ending craze of #HalamithiHabibo.@Jagadishbliss @Nelsondilpkumar @anirudhofficial @hegdepooja @AlwaysJani @aparnaDasss pic.twitter.com/b4FFq3ngp6
#KatrinaKaif Dancing For #JollyOGymkhana Song From #Beast @anirudhofficial #Varisu @actorvijay @Nelsondilpkumar pic.twitter.com/EPc5YaKZPh
— M∆HI - Infinity Plus YouTube (@MahilMass) September 25, 2022