கடந்த 2021 ம் ஆண்டு பெரும் எதிர்பார்ப்பின் மத்தியில் பான் இந்திய திரைப்படமாக வெளியான திரைப்படம் ‘புஷ்பா தி ரைஸ்’ தெலுங்கு திரைப்படமாக உருவான இப்படம் இந்திய அளவில் அனைத்து மொழிகளிலும் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வரவேற்பை பெற்றுள்ளது. தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம் மொழிகளில் அதிக வசூல் பெற்றது மட்டுமல்லாமல் உலக நாடுகளில் பல மொழிகளிலும் டப் செய்யப்பட்டு முதல் பாகத்திற்கான வசூலை பார்த்தது படக்குழு. குறிப்பாக ரஷ்யா மொழியில் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது.
சந்தன மரம் மற்றும் அதை சுற்றி நிகழும் வியாபார விளையாட்டை மையப்படுத்தி உருவான இப்படத்தின் நாயகனாக தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிக்க அவருடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் பாசில், ஜெகதீஸ் பிரதாப் பண்டாரி, சுனில் ராவ் ரமேஷ், தனஞ்சயா, அஜய் கோஷ் அனசுயா பரத்வாஜ், உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். தேவிஸ்ரீ பிரசாத் இசையில்முதல் பாகத்தின் பாடல்கள் அனைத்தும் அனைத்து மொழிகளிலும் மிகப்பெரிய வெற்றி பெற்றது குறிப்பாக தமிழில் தெலுங்கு மொழிக்கு நிகரான வாரவேற்பை பெற்றது. மேலும் முதல் பாகத்தில் நடிகை சமந்தா சிறப்பு பாடலில் தோன்றி ரசிகர்களுக்கு அடடகாசமான விருதளித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவான இப்படத்தின் முதல் பாகம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இரண்டாம் பாகத்திற்கான அப்டேட் குறித்து இன்று வரை ரசிகர்கள் எதிர்பார்ப்ப்பில் உள்ளனர். இந்நிலையில் புஷ்பா படத்தின் இரண்டாம் பாகமான ‘புஷ்பா தி ரூல்’ படம் குறித்த அப்டேட்டினை வெளியிட்டுள்ளது படக்குழு.
இதனையடுத்து அந்த பதிவு ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது. ஆனால் அப்டேட் குறித்த எந்தவொரு விளக்கமான அறிவிப்பு இல்லாததால் இணையத்தில் ரசிகர்கள் தங்கள் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். வரும் ஏப்ரல் 8 ம் தேதி படத்தின் நாயகன் அல்லு அர்ஜுன் அவர்களின் பிறந்த நாள் வரவிருப்பதால் அன்று புஷ்பா படக்குழு சார்பில் சிறப்பு போஸ்டர் அல்லது டீசர் போல் வெளியாக வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப் படுகிறது. நீண்ட நாள் கழித்து வெற்றிப்படமான புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அப்டேட் வருவதை ரசிகர்கள் தற்போது கொண்டாடி வருகின்றனர்.