விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் உருவாகி கடந்த தீபாவளிக்கு வெளியான திரைப்படம் பிகில்.ஏ.ஜி.எஸ் என்டேர்டைன்மெண்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்தனர்.ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்.விஜய் இரட்டை வேடங்களில் வயதான கெட்டப் உடன் இந்த படத்தில் நடித்திருந்தார்.இந்த படத்தின் பர்ஸ்ட்லுக்கே ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது.
பெண்கள் கால்பந்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடித்திருந்தார்.கதிர்,விவேக்,யோகி பாபு,இந்துஜா,அமிர்தா ஐயர் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்திருந்தார்.ரூபன் இந்த படத்தின் எடிட்டிங் வேலைகளை செய்து வந்தார்.இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்த இந்த படம் பட்டிதொட்டி எங்கும் உள்ள ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று 300 கோடிகளை வசூல் செய்தது.கடந்த வருடத்தின் அதிகம் வசூல் செய்த படம் என்ற பெருமையை பெற்றிருந்தது பிகில்.ரஹ்மான் இசையில் இந்த படத்தின் பாடல்கள் ரசிகர்களிடம் செம ரீச்சை பெற்றிருந்தன.ஆல்பம் வெளியான அனைத்து தளங்களிலும் சூப்பர்ஹிட் முடித்திருந்தது.
இந்த படத்தில் முதல்முறையாக ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் விஜய் பாடியிருந்தார்.இந்த படத்தின் பாடல்கள் யூடியூப்பில் 300 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை புடைத்திருந்தது.கொரோனா பாதிப்பு காரணமாக ஷூட்டிங்குகள்,திரையரங்குகள் உள்ளிட்டவை எதுவும் நடைபெறாமல் இருந்தன.சில இடங்களில் கொரோனா பாதிப்பு குறைந்ததை அடுத்து திரையங்குகள் திறக்கப்பட்டு வருகின்றன.சில இடங்களில் பிகில் திரையிடப்பட்டு வருகிறது.
யூடியூப்பில் பல சாதனைகளை பிகில் பாடல்களும்,பிகில் ட்ரைலர்,ஆடியோ லான்ச் வீடியோக்கள் உள்ளிட்டவை நிகழ்த்தியுள்ளன.இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரும் வெளியானது முதலே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.விஜய் முதல்முதலாக வயதான கெட்டப்பில் தோன்றிய இந்த போஸ்டர் பெரிய வரவேற்பை பெற்றிருந்தது.இந்த போஸ்டர் எப்படி உருவானது என்பது குறித்து இந்த படத்தின் போஸ்டர் டிசைனர் கோபி பிரசன்னா தனது ட்விட்டர் பக்கத்தில் படித்திவிட்டுள்ளார்.இந்த போஸ்டர் ஸ்கெட்ச் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.
Found this Rough, crude concept scribble of #biggle pic.twitter.com/kubmGEceyV
— Gopi Prasannaa (@gopiprasannaa) August 15, 2020