இந்தியாவின் முன்னணி தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக் பாஸ் நிகழ்ச்சியில் மக்கள் மத்தியில் மிகப் பிரபலம். சர்ச்சைக்குரிய பல விமர்சனங்கள் இந்நிகழ்ச்சியின் மீது எழுந்தாலும் மக்களின் நிகழ்ச்சி மீது காட்டும் ஆர்வம் மட்டும் குறையவே இல்லை. உலக அளவில் முதலில் பிரபலமடைந்த இந்த நிகழ்ச்சி இந்தியாவில் ஹிந்தியில் தொடங்கப்பட்டது.
கடந்த நான்கு வருடங்களில் தென்னிந்தியாவில் ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் தமிழ்நாட்டில் நடிகர் கமல்ஹாசன் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் மலையாளத்தில் நடிகர் மோகன்லால் தொகுத்து வழங்குகிறார். இந்நிலையில் சென்னையில் உள்ள ஈவிபி ஃபிலிம் சிட்டியில் நடைபெற்று வந்த பிக் பாஸ் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.
நடிகர் மோகன்லால் தொகுத்து வழங்கும் மலையாள பிக் பாஸ் சீசன் 3 சென்னையில் உள்ள ஈவிபி ஃபிலிம் சிட்டியில் நடைபெற்று வந்த நிலையில் பிக்பாஸ் செட்டில் உள்ள குழுவில் பணிபுரியும் ஆறு நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதால் தமிழக மருத்துவத்துறை உத்தரவின் பேரில் உடனடியாக தமிழக காவல்துறை பிக்பாஸ் செட்டை பூட்டி அதிரடியாக சீல் வைத்தது.
பிப்ரவரி 14 ஆம் தேதி தொடங்கப்பட்ட பிக் பாஸ் சீசன் 3 கிட்டத்தட்ட 94 நாட்களை கடந்துள்ள நிலையில் குழுவில் பணிபுரியும் நபர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் வீட்டுக்குள் இருக்கும் பிரபலங்களுக்கும் தொற்று ஏற்பட வாய்ப்புள்ள காரணத்தினால் உடனடியாக இந்நிகழ்ச்சி நிறுத்தப்பட்டுள்ளது.கடைசியாக பிக் பாஸ் வீட்டில் இருந்த எட்டு போட்டியாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டு தனியார் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்கொரோனா இரண்டாம் அலையின் காரணமாக தமிழகம் முழுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் படப்பிடிப்பு நடந்து வந்த பிக்பாஸ் தற்போது உடனடியாக நிறுத்தப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது.