வழக்கம்போல் ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரிக்கும் வகையில் விறுவிறுப்புக்கு கொஞ்சமும் பஞ்சம் இல்லாமல் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. அதிலும் இந்த வாரம் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியின் மிக முக்கிய டாஸ்காக பூகம்பம் டாஸ்க் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த டாஸ்கின் முடிவில் தற்போது இருக்கும் ஹவுஸ் மேட்சுகள் தோற்றால் இதற்கு முன்பு எலிமினேட் ஆகி வெளியில் சென்ற மூன்று ஹவுஸ் மேட்ஸ்கள் ஏற்கனவே இருக்கும் ஹவுஸ் மேட்சுகளில் மூன்று பேரை வெளியேற்றிவிட்டு உள்ளே நுழைய வாய்ப்பு இருக்கிறது. முன்னதாக நடைபெற்ற முதல் டாஸ்கில் ஹவுஸ் மேட்ஸ்கள் தோல்வியுற்றதால் கட்டாயமாக வைல்ட் கார்டு என்ட்ரியில் ஏற்கனவே எலிமினேட்டான ஒரு போட்டியாளர் உள்ளே நுழைவது உறுதியாகி உள்ளது. இந்த நிலையில் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் இருந்து கடந்த வாரம் எவிக்டாகி வெளியேறிய பிறகு முதல்முறையாக ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்த கானா பாலா அவர்கள் நமது கலாட்டா தமிழ் சேனலில் பேசியபோது, அவரிடம் நாங்கள் ஒவ்வொரு போட்டியாளர்களின் பெயர்களை சொல்கிறோம் அவர்களைப் பற்றிய உங்கள் புரிதல்களை பகிர்ந்து கொள்ள முடியுமா? என, "பூர்ணிமா ரவி பற்றி சொல்லுங்கள் அவருடைய கேம் ப்லே பற்றி என்ன நினைக்கிறீர்கள்?" என கேட்டபோது,

“அவர் நன்றாக விளையாடவில்லை என்று நான் சொல்லவில்லை நன்றாக விளையாடுகிறார். கடந்த பிரச்சனையை திரும்ப பேசும்போது தான் எரிச்சல் ஆகிறது. அடுத்தது வேறு ஒன்று பண்ண வேண்டியது தானே…” என்றார். தொடர்ந்து அவரிடம், "லட்டு கொடுக்கும் டாஸ்க் அர்ச்சனாவிடம் இனிமேல் நண்பர்களாக இருக்கலாம் என்று கூட சொன்னாரே?" எனக் கேட்ட போது, “சும்மா தமாசுக்கு சொல்ல வேண்டியதுதான் லட்டு தானே கொடுக்கிறாய் என்ன சொத்தா எழுதிக் கொடுக்கிறாய். லட்டை கொடுத்து ஒரு ட்விஸ்ட் பண்ண வேண்டியது தான். ஒரு யோசிக்க வைப்பது தானே... ஓ அப்படி என்றால் நம் மீது உண்மையான சண்டை இல்லையா பூர்ணிமா நல்ல பொண்ணு தானே நாம் தானே கோபப்பட்டோம் என அர்ச்சனா நினைப்பார்கள் தானே... லட்டு கொடுப்பதில் என்ன வீட்டையா எழுதி கொடுத்து விட்டார்.” என்றார். தொடர்ந்தவரிடம் “இது அந்த இடத்தில் நியாயமாக இல்லை என்கிறீர்களா?” என கேட்ட போது, “அப்படித்தானே எடுத்துக் கொள்ள முடியும். 13 பேர் இருக்கிற இடத்தில் அப்படி தானே இருக்கும். நான் கூட அப்படித்தான் கொடுத்தேன் மாயா உடைய கேப்டன்சிக்கு நான் அல்வா கொடுத்தேன் கசப்பான அல்வா கொடுத்தேன். மாயா என்ன நினைத்தார்கள் நம்முடைய கேப்டன்சிக்கு நெகட்டிவ்வாக இவன் கொடுக்கிறான் என்று... நான் அதைச் சொல்லவில்லையே கசப்பை நீங்கள் சாப்பிடுங்கள் எங்களுக்கு ஹவுஸ் மேட்சுகளுக்கு இனிப்பை கொடுங்கள் அதுதான் கேப்டன்சி என்னுடைய எண்ணம் இதுதானே இது மாதிரி நிறைய மாற்று கருத்துக்கள் இருக்கும் எதற்கு லட்டு கொடுத்தார்கள் என்று கேட்டு பார்க்க வேண்டும் 13 பேர் அல்லவா வேறு எப்படி இருக்கும்” என பதில் அளித்துள்ளார். இன்னும் பல முக்கிய தகவல்களை பகிர்ந்து கொண்ட கானா பாலாவின் அந்த சிறப்பு பேட்டியை கீழே உள்ள லிங்கில் காணலாம்.