ஆரிக்கு பிக் பாஸ் வீட்டுக்கு உள்ளேயே அதிக அளவு எதிர்ப்பு இருந்து வரும் நிலையில் வார வாரம் அவர் நாமினேட் ஆகி வந்தார். இந்நிலையில் இந்த வாரம் நடைபெற்ற பால் கேட்ச் டாஸ்கில் அவர் மற்றும் சோம் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும் ரியோ டாஸ்கில் அதிக மதிப்பெண்கள் பெற்றதால் அவர் கேப்டனை தேர்ந்தெடுக்கும் டாஸ்கிற்கு நேரடியாக தகுதி பெற்றார்.
பிக்பாஸ் 82-வது நாளில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் களைகட்டி உள்ளது. இன்றைய முதல் ப்ரோமோ வீடியோவில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் மட்டுமே காட்டப்பட்டு இருந்தது. ஆடல், பாடல், கொண்டாட்டம், கேக், பரிசுகள், உணவு என இன்று போட்டியாளர்களுக்கு ஒரே கொண்டாட்டம் தான். அதனால் இன்றைய பிக் பாஸ் வழக்கம்போல சண்டை, வாக்குவாதம் என போகாமலே கொண்டாட்டத்திற்கான மூடிலேயே இருந்தது.
பிக்பாஸ் வீட்டின் இந்த வார தலைவர் யார் என்பதை தேர்ந்தெடுக்கும் வகையில் புதிதாக தெர்மாகோல் டாஸ்க் வழங்கப்பட்டது. பால் கேட்ச் டாஸ்க்கில் அதிக புள்ளிகள் பெற்ற ஆரி, சோம் மற்றும் ரியோ இதில் கலந்து கொண்டனர். போட்டியாளர்கள் ஸ்பூனை வாயில் வைத்து கொண்டு தெர்மாகோலை நிரப்பி snow man தலையில் போட வேண்டும்.
மூவரும் சரியாக ஈடுபடுகிறார்களா என்பதை கவனிக்க ரம்யா மற்றும் பாலாஜி ஜட்ஜாக இருக்கின்றனர். கோட்டில் நடந்து வந்து snow man தலையில் போட வேண்டும் என்பதே விதிமுறை. இதை சரியாக செய்து முதலில் நிரப்பிய ஆரி, இந்த வார பிக்பாஸ் வீட்டின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த அறிவிப்பை பாலாஜி ஹவுஸ்மேட்ஸ் முன்பு அறிவித்தார். புதிதாக தலைவரான ஆரிக்கு வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர் சக போட்டியாளர்கள்.
கடந்த வாரம் நடந்த கேப்டன்ஸி டாஸ்கில் அர்ச்சனா ஜெயித்தார், ஆனால் அவர் எலிமினேட் செய்யப்பட்டுவிட்டதால், இந்த வாரத்தில் பாலாஜியை அவர் தலைவராக நியமித்துவிட்டு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
#Day82 #Promo2 of #BiggBossTamil #பிக்பாஸ் - தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/bl5okLxIwF
— Vijay Television (@vijaytelevision) December 25, 2020