பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு இந்த வாரம் பால் கேட்ச் டாஸ்க் வழங்கப்பட்டுள்ளது. அதில் போட்டியாளர்கள் வீட்டுக்குள் இருக்கும் டிவி முன்பு இருக்க வேண்டும் என்றும், யார் பெயர் டிவியில் காட்டப்படுகிறதோ, அவர் வேகமாக ஓடிச்சென்று வெளியில் பந்தை பிடிக்க வேண்டும். இதில் போட்டியாளர்கள் தனித்தனியாக பங்கேற்கலாம் என்பதால் எந்த வித பிரச்னையும் எழாது.
இன்னும் சில வாரங்களில் பிக் பாஸ் 4 முடிவு பெற உள்ள நிலையில் போட்டியாளர்களுக்கு மிகவும் கடினமான டாஸ்குகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதிலும் நேற்று தொடங்கிய பால் கேட்ச் டாஸ்க் இரவு முழுவதும் தொடர்ந்து நடந்தது. அதனால் போட்டியாளர்கள் தூங்காமல் கண்விழித்து பந்தை பிடிப்பதற்காக காத்திருந்தனர்.
அதனால் அவர்கள் பகலில் தூங்கிக்கொண்டு இருக்கின்றனர். அதை விமர்சிக்கும் வகையில் தூங்காதே தம்பி தூங்காதே பாடலும் இன்றைய இரண்டாவது ப்ரோமோவில் போடப்பட்டு உள்ளது. அதன் பின் பந்தை பிடிக்கும் டாஸ்க் முடிக்கப்பட்டு போட்டியாளர்களுக்கு வேறு ஒரு வில்லங்கமான டாஸ்க் வழங்கப்பட்டது.
இந்த டாஸ்கில் செயல்பட்ட விதத்தின் அடிப்படையில் போட்டியாளர்கள் விவாதித்து ஒன்று முதல் ஒன்பது வரை வரிசைப்படுத்திக்கொள்ள வேண்டும் என கூறப்பட்டது. அதனால் பிரச்சனை எதாவது வருமே என நீங்கள் எதிர்பார்ப்பது போலவே தான் நடந்தது.
சொன்னதை மீண்டும் சொல்ல மாட்டேன் என ரியோ சொல்ல அதற்காக ஆரி அவருடன் வாக்குவாதம் செய்கிறார். இதுக்கு பேரு தான் கார்னர் என ஆரி பற்றி புகார் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பி சென்றுவிடுகிறார் ரியோ. ஆரி மற்றும் ரியோ இடையே தொடர்ந்து இது போன்ற சண்டைகள் அதிகம் வருவதாக கமெண்ட் செய்து வருகின்றனர் பிக்பாஸ் ரசிகர்கள்.
#Day80 #Promo2 of #BiggBossTamil #பிக்பாஸ் - தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/zNjJbG1JGL
— Vijay Television (@vijaytelevision) December 23, 2020