பிக் பாஸ் என்றாலே பரப்புக்கும் பஞ்சாயத்துக்கும் பஞ்சம் இருக்காது. அடிக்கடி சர்ச்சையான பல விஷயங்கள் ஏற்படுவதால் அது பற்றிய விவாதங்கள் சமூக வலைத்தளங்களில் இருந்து கொண்டே தான் இருக்கும். ஆனால் இந்த வருடம் நடந்துவரும் நான்காவது சீசனில் பெரிய சர்ச்சைகள் எதுவும் வரவில்லை என்றாலும் போட்டியாளர்கள் நடுவில் தினம்தோறும் நடக்கும் சண்டை தான் தினமும் காட்டப்பட்டு வருகிறது. எப்போவாவது சண்டை என்றால் பரவாயில்லை, எல்லா நாளுமே சண்டை தான் என்றால் எப்படி என ரசிகர்களே கேட்கிற அளவுக்கு தினமும் பிரச்சனைகள் நடந்து வருகிறது.
கடந்த இரண்டு நாட்களாக போட்டியாளர்களுக்கு வழங்கப்பட்ட கோழிப்பண்ணை டாஸ்க்கிலும் அதிக அளவு பிரச்சனைகள் நடந்தன. அதனால் இந்த டாஸ்க்கே சுவாரஸ்யம் இல்லாமல் தான் இருந்தது. இந்நிலையில் தற்போது இந்த வார டாஸ்கில் சரியாக perform செய்யாத boring performerஐ தேர்ந்தெடுத்து சொல்ல வேண்டும் என பிக் பாஸ் கூறி இருக்கிறார். அப்போது பலரும் ஷிவானி மற்றும் கேபியின் பெயரை கூறினர்.
ஆனால் அர்ச்சனை மட்டும் ஆரியின் பெயரை கூறினார். அவர் எது சொன்னாலும் பிரச்சனை செய்கிறார் என்பதை தான் குற்றச்சாட்டாக சொன்னார். இறுதியில் ஷிவானி மற்றும் கேபி ஆகிய இருவரும் இந்த வாரம் ஈடுபாடு இல்லாமல் இருந்தனர் என கூறி ஜெயிலுக்கு அனுப்பப்பட்டு இருக்கின்றனர். இது தற்போது வெளிவந்து இருக்கும் இன்றைய இரண்டாவது ப்ரோமோ வீடியோவில் காட்டப்பட்டு உள்ளது.
ஷிவானி இந்த குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொள்ள முடியாது என கோபத்துடன் அனைவர் முன்னிலையில் சொல்லி இருக்கிறார். அனிதா போல அவரும் இதற்காக சண்டை போடுவாரா என்பதை இன்றைய எபிசோடில் தான் பார்க்க வேண்டும்.
ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் ஷிவானி மற்றும் கேபிக்கு இடையே சில விரிசல் ஏற்பட்டது. இந்த மாதிரி நேரத்தில் சக ஹவுஸ்மேட்ஸ் வெளியே இருந்து சிறையில் உள்ளவர்களிடம் வாக்குவாதம் செய்வார்கள். அப்படி இன்றைய நாளில் ஷிவானி மற்றும் கேபியிடம் யார் மாட்டுகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
#Day74 #Promo2 of #BiggBossTamil #பிக்பாஸ் - தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/BelFWJrGQb
— Vijay Television (@vijaytelevision) December 17, 2020