விஜய் டிவியில் ஒளிபரப்பான ரெட்டை வால் குருவி என்ற தொடரில் ஹீரோயினாக நடித்து ரசிகர்களுக்கு அறிமுகமானவர் பவானி ரெட்டி.இதனை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான சின்னத்தம்பி தொடரில் ஹீரோயினாக நடித்திருந்தார்.ப்ரஜின் இந்த தொடரில் ஹீரோவாக நடித்திருந்தார்.இந்த தொடர் ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பை பெற்றிருந்தது.

இந்த தொடரில் இவரது நடிப்பினை கண்டு இவருக்கென்று ஒரு ரசிகர் பட்டாளம் உருவானது.இந்த தொடர் நிறைவடைந்த பின் சன் டிவியில் ஒளிபரப்பான ராசாத்தி தொடரில் ஹீரோயினாக நடித்துவந்தார்.கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு மேலாக இந்த சீரியலில் நடித்து வந்த இவர் சில காரணங்களால் இந்த தொடரில் இருந்து பாதியிலேயே விலகினார்.

இன்ஸ்டாகிராமில் தனது ரசிகர்களுடன் எப்போதும் கலந்துரையாடும் பவானி அவ்வப்போது போட்டோக்களையும்,வீடியோக்களையும் பகிர்ந்து வருவார்.சீரியல்களை தவிர சில படங்களிலும் பவானி நடித்துள்ளார்.தமிழை தவிர தெலுங்கிலும் சில  சூப்பர்ஹிட் சின்னத்திரை தொடர்களில் நடித்துள்ளார் பவானி ரெட்டி.

சமீபத்தில் தொடங்கிய பிக்பாஸ் 5 தொடரில் இவர் பங்கேற்று வருகிறார்.இவருக்கென்று ஆர்மி தொடங்கி ரசிகர்கள் தங்கள் அன்பை காட்டி வருகின்றனர்.அதில் ஒரு ரசிகர் பக்கத்தில் அவரது சிறுவயது புகைப்படம் முதல் தற்போதுள்ள புகைப்படம் வரையுள்ள ட்ரான்ஸ்பர்மேஷன் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளனர்.இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

View this post on Instagram

A post shared by big fan of @pavani9-reddy sis (@pavanireddy_heart_beat)