பிக் பாஸ் போட்டியாளரும் நடிகருமான முகேன் ராவ் கதாநாயகனாக நடித்திருக்கும் ஜின்- The Pet திரைப்படத்திலிருந்து ‘குட்டிமா’ என்னும் வீடியோ பாடல் தற்போது வெளிவந்துள்ளது. தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளர்கள் ஜோடியாக திகழும் விவேக் - மெர்வின் ஜோடி இசை அமைத்திருக்கும் இந்த குட்டிமா பாடலை மெர்வின் பாடியிருக்கிறார். கு.கார்த்தி எழுதி இருக்கும் இந்த குட்டிமா பாடலுக்கு ஸ்ரீதர் மாஸ்டர் நடன இயக்குனராக பணியாற்றியிருக்கிறார். பக்கா ஃபேண்டஸி என்டர்டைனிங் திரைப்படமாக வரவிருக்கும் இந்த ஜின்- The Pet திரைப்படத்திலிருந்து வந்திருக்கும் இந்த குட்டிமா பாடலில் முகேன் ராவ் சொடக்கு போட்டதும் எல்லோரும் அப்படியே நின்று விடுகிறார்கள். மீண்டும் சொடக்கு போட்டதும் பழைய நிலைக்கு வருகிறார்கள். இந்த மாதிரியான ஏதோ ஒரு வித்தியாசமான சூப்பர் பவர் கொண்ட "ஜீனி" மாதிரியான ஒரு கான்செப்டில் இந்த ஜின்- The Pet படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வெளிவந்திருக்கும் ஜின்- The Pet படத்தின் குட்டிமா வீடியோ பாடல் இதோ…
முகேன் ராவ் கதை நாயகனாக நடித்திருக்கும் இந்த ஜின்- The Pet திரைப்படத்தில் கதாநாயகியாக பவ்யா திரிகா நடித்திருக்கிறார் மேலும் ராதாரவி, பால சரவணன், இமான் அண்ணாச்சி, நந்து ஆனந்த், வடிவுக்கரசி, நிழல்கள் ரவி, வினோதினி, ஜார்ஜ் விஜய் மற்றும் ரித்விக் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். இயக்குனர் பாலா எழுதி இயக்கி தயாரித்திருக்கும் இந்த ஜின்- The Pet திரைப்படத்திற்கு அர்ஜுன் ராஜா ஒளிப்பதிவாளராக பணியாற்றி இருக்கிறார் தினேஷ் குமார் அவர்களின் கலை இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்திற்கு தீபக் படத்தொகுப்பு செய்திருக்கிறார். விரைவில் ஜின்- The Pet திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சின்னத்திரை ரசிகர்களின் ஃபேவரட் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு மிகச் சிறப்பாக விளையாடி ரசிகர்களின் மனதை கவர்ந்த முகேன் ராவ் அந்த சீசனின் டைட்டில் வின்னராகவும் வெற்றி பெற்றார். ஆரம்ப கட்டத்தில் சுயாதீன இசைக் கலைஞராக மலேசியாவில் மிகப்பெரிய அளவில் பிரபலமாக தனது இசை படைப்புகளை வெளியிட்டு வந்த முகேன் ராவ் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் மத்தியில் இன்னும் பிரபலம் அடைந்தார். அதன் தொடர்ச்சியாக தமிழ் சினிமாவில் கதாநாயகனாக களம் இறங்கிய முகேன் ராவ் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளிவந்த வேளாண் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார்.தொடர்ந்து சிவா மனசுல சக்தி & பாஸ் என்கிற பாஸ்கரன் என ரசிகர்கள் கொண்டாடிய சூப்பர் டூப்பர் நகைச்சுவை திரைப்படங்களை கொடுத்த இயக்குனர் M.ராஜேஷ் அவர்களின் முதல் வெப் சீரிஸ் ஆக சமீபத்தில் நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளிவந்த MY3 என்ற வெப் சீரிஸில் முன்னணி கதாபாத்திரத்தில் முகேன் ராவ் நடித்திருந்தார். அடுத்து வெப்பம் படத்தின் இயக்குனர் அஞ்சனா அலிகான் இயக்கத்தில் பக்கா ரொமான்டிக் படமாக தயாராகி இருக்கும் மதில் மேல் காதல் திரைப்படத்தில் முகேன் ராவ் கதாநாயகனாக நடித்திருக்கிறார். விரைவில் மதில் மேல் காதல் திரைப்படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்புகள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.