தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மக்களின் மனம் கவர்ந்த முக்கிய நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ்.இதுவரை நடந்து முடிந்த மூன்று சீசனும் பெரிய வெற்றியை பெற்றதோடு, நல்ல TRPயையும் பெற்றிருந்தது.இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார்.கமல்ஹாசனின் அரசியல் வசனங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இந்த தொடரில் பங்கேற்ற பிரபலங்கள் பட்டி தொட்டி எங்கும் உள்ள மக்களின் ஆதரவை பெற்று நட்சத்திரங்களாக உயர்ந்துள்ளனர்.இதன் முதல் சீசன் தொடங்கப்பட்டபோது பலரும் ஆர்வத்தோடு இந்த தொடரை பார்க்க ஆரம்பித்தனர்.ஓவியா,ஆரவ்,கஞ்சா கருப்பு,பரணி,பொன்னம்பலம்,வையா
முதல் சீசனின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து,அடுத்த வருடம் சீசன் 2 தொடங்கியது ,சீசன் 1-லிலேயே இவ்வளவு பரபரப்பு இருக்க சீசன் 2 மட்டும் குறைச்சலாக இருக்குமா என்ன என்று ரசிகர் யார் யார் பங்கெடுக்கிறார்கள் என்பதிலேயே மிகவும் ஆர்வமாக இருந்தனர்.யாஷிகா ஆனந்த்,மஹத்,ஜனனி ஐயர்,ரித்விகா,தாடி பாலாஜி,சென்றாயன்,மும்தாஜ்,ஐஸ்
அதுதான் எல்லாமே பண்ணிட்டீங்களே என்று ரசிகர்கள் பெருமூச்சு விடுவதற்குள் ,அடுத்த சீசன் தொடங்கியது.இந்த சீசன் தொடக்கத்தில் ஷெரின் , சாண்டி , கவின் , லாஸ்லியா , தர்ஷன் , சேரன் ,சரவணன்,மதுமிதா,வனிதா என்று கலகலப்பாகவே தொடங்கியது ஆனால் போக போக கவின்-லாஸ்லியா காதல் விவகாரம்,சேரன்-சரவணன் வாக்குவாதம்,மதுமிதாவின் தற்கொலை முயற்சி,வனிதாவின் கொளுத்திப்போடும் குணம் என்று தொடர் பரபரப்பாக சென்று அதிக TRP-யை அள்ளியது.
இந்த தொடரில் முக்கிய போட்டியாளராக இருந்தவர் ரேஷ்மா.விஷ்ணு விஷால் நடித்த வேலைனு வந்துட்டா வேலைக்காரன் படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்த இவர் ,பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் ஏராளமான ரசிகர்களை பெற்றிருந்தார்.தொடர்ந்து சில படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார் ரேஷ்மா.
அவ்வப்போது சீரியல்களிலும் சில முக்கிய வேடங்களில் நடித்துள்ளார் ரேஷ்மா.கொரோனா காரணமாக போடப்பட்டுள்ள லாக்டவுனால் பல பிரபலங்களும் தங்கள் நேரங்களை சமூகவலைத்தளங்களில் செலவிட்டு வருகின்றனர்.ரேஷ்மாவும் தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வந்தார்.தற்போது தனது புதிய ஒர்க்கவுட் வீடியோ ஒன்றை ஜோஷ் ஆப்பில் பகிர்ந்துள்ளார் ரேஷ்மா.இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது.