பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து ராஜமௌலி இயக்கும் படம் RRR.ராம்சரண் ஜூனியர் NTR இருவரும் இந்த படத்தின் கதாநாயகனாக நடிக்கின்றனர்.ஹிந்தியில் முன்னணி நடிகர் அஜய் தேவ்கன்,ஆல்யா பட்,சமுத்திரக்கனி என ஒரு மாபெரும் நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர்.

.



பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.முதலில் படம் 2020 ஜூலை 30ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த இந்த படத்தின் ரிலீஸ்தேதி ஜனவரி 8ஆம் தேதி 2021-ல் வெளியாகும் அறிவிக்கப்பட்டது.

.



இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இன்று ராம்சரணின் பிறந்தநாளை முன்னிட்டு ராம்சரண் குறித்த ப்ரோமோ ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.இந்த ப்ரோமோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்

.