ஆங்கில படங்களை இந்திய மொழிகளில் டப் செய்து திரையரங்குகளில் ஓட்டுவது அன்றிலிருந்தே இருந்து வருகிறது. ஆனால் அன்றை விட இன்றுதான் ஆங்கில படங்களுக்கு மவுசு அதிகம். எந்த படம் யார் படம் வந்தாலும் அதை பார்க்கவும் ஆட்கள் இருக்கின்றனர், ரசிகர்களின் சினிமா பார்வை தற்போது விரிவடைந்துள்ளது. இதனால் ஆங்கிலப் படங்கள் வர்த்தக ரீதியாக முதலீடு பார்க்கும் நாடுகளில் ஒரு நாடாக தற்போது இந்தியா உள்ளது. அதனாலே முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் இந்திய மொழிகளான இந்தி, தெலுங்கு, மலையாளம், தமிழ் ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியப்படுகின்றது. நம் ஊர் நடிகர்களுக்கு கிடைக்கும் வரவேற்பு தற்போது ஆங்கில படங்களுக்கும் கிடைத்துள்ளது என்றால் மிகையாகாது.
இந்திய திரையுலகில் ஆங்கில படங்களுக்கான ரசிகர்கள் அதிகம். எந்த படம் வந்தாலும் அந்த படத்தை பார்க்க ஒரு தனி கூட்டமே உள்ளது. அந்த வகையில் மார்வெல் ஸ்டுடியோ தயாரிப்பில் வெளிவரும் திரைப்படங்களுக்கு இந்திய ஒரு தனி மார்க்கெட் உள்ளது. கடந்த பல ஆண்டுகளாக பல நட்சத்திரங்களை வைத்து படம் இயக்கி ஒரு கதையிலே அதனை நகர்த்தி அந்த கதையின் இறுதியான ‘அவேன்ஜெர்ஸ் எண்டு கேம்’ என்ற பெயரில் வெளியிட்டது மார்வெல் ஸ்டுடியோ. கடந்த 2019 ல் வெளிவந்த இந்த அவெஞ்சர்ஸ் எண்டு கேம் திரைப்படத்திற்கு ஒரு உச்ச நடிகரின் படங்களுக்கு கிடைக்க கூடிய வரவேற்பு இந்த படத்திற்கும் கிடைத்தது, பத்துக்கும் மேற்பட்ட முன்னணி நடிகர்கள் ஒரே திரையில் பார்ப்பது ரசிக்கக் கூடியவையாகவே இருந்தது, தமிழ் மட்டுமல்லாமல் இந்திய முழுவதும் அவெஞ்சர்ஸ் எண்டு கேம் திரைப்படம் கொடி கட்டி பறந்தது, கிட்டத்தட்ட இந்திய மொழிகளில் 367 கோடி வசூல் செய்தது அவெஞ்சர்ஸ் எண்டு கேம். அதன்படி இந்தியாவில் அதிக வசூல் செய்த ஆங்கில திரைப்படம் என்ற பெயரை தக்கவைத்தது. கடந்த 2009 ம் ஆண்டு ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் ‘அவதார்’ திரைப்படம் வெளிவந்து உலகமெங்கும் மாபெரும் வெற்றியை பெற்றது. அமெரிக்கன் டாலர் மதிப்பில் 280 கோடி டாலர் மதிப்பில் வசூல் செய்தது, வசூல் மட்டுமா உலகின் உயரிய விருதான ஆஸ்கர் 3 பிரிவுகளில் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது, இதன் வசூலை பல ஆண்டுகள் கழித்து மார்வெல் ஸ்டுடியோவின் அவேன்ஜர் எண்டு கேம் முறியடித்து முன்னிலையில் இருந்தது.