விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தவர் அஷ்வின் குமார்.இதற்கு முன் சீரியல்கள்,ஆல்பம் பாடல்கள்,படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த அஷ்வின்.இந்த நிகழ்ச்சிக்கு பிறகு பட்டி தொட்டி எங்கும் பிரபலமானவராக மாறினார்.
இந்த நிகழ்ச்சியின் வெற்றியை தொடர்ந்து இவர் நடித்த ஆல்பம் பாடல்கள் பெரிய வெற்றியை அடைந்தன.அடுத்ததாக Trident Arts நிறுவனம் தயாரிப்பில் ஹீரோவாகும் வாய்ப்பை பெற்றார் அஷ்வின்.என்ன சொல்ல போகிறாய் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தினை அறிமுக இயக்குனர் ஹரிஹரன் இயக்கியுள்ளார்.
அவந்திகா மிஸ்ரா,தேஜு அஷ்வினி இருவரும் படத்தின் நாயகிகளாக நடித்துள்ளனர்.குக் வித் கோமாளி புகழ் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.விவேக்-மெர்வின் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளனர்.இந்த படத்தின் மூன்று பாடல்கள் மற்றும் ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் முடிந்தது.இதனை தொடர்ந்து இந்த படத்தின் அடுத்த பாடலின் லிரிக் வீடீயோவை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த பாடலை கீழே உள்ள லிங்கில் காணலாம்