சூது கவ்வும் திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் நடிகராக அறிமுகமாகி தொடர்ந்து தெகிடி, கூட்டத்தில் ஒருவன், சம் டைம்ஸ், ஓ மை கடவுளே உள்ளிட்ட திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் தனக்கென தனி இடம் பிடித்தவர் நடிகர் அசோக்செல்வன். முன்னதாக இந்த ஆண்டில் (2022) சில நேரங்களில் சில மனிதர்கள், மன்மதலீலை மற்றும் ஹாஸ்டல் உள்ளிட்ட திரைப்படங்கள் நடிகர் அசோக்செல்வன் நடிப்பில் வெளிவந்தன.

இதனைத்தொடர்ந்து மேலும் அசோக்செல்வன் நடிப்பில் அடுத்தடுத்து திரைப்படங்கள் வெளிவர தயாராகி வருகின்றன. முதலாவதாக தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிகளில் நித்தம் ஒரு வானம் (தெலுங்கில் ஆகாஷம்) திரைப்படத்தில் அசோக்செல்வன் கதாநாயகனாக தற்போது நடித்து வருகிறார்.

அடுத்ததாக அறிமுக இயக்குனர் சந்தீப் சியாம் இயக்கத்தில் அசோக் செல்வன் நடித்துள்ள திரைப்படம் வேழம். K 4 KREATIONS தயாரிப்பில் ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகியுள்ள வேழம் படத்தில் அசோக் செல்வன் உடன் இணைந்து ஜனனி மற்றும் ஐஸ்வர்யா மேனன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

வேழம் திரைப்படத்திற்கு சக்தி அரவிந்த் ஒளிப்பதிவு செய்ய, ஜானு சந்தர் இசையமைத்துள்ளார். வேழம் திரைப்பட வருகிற ஜூன் 24ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் வேழம் திரைப்படத்திலிருந்து மாறும் உறவே பாடல் தற்போது வெளியானது. அந்த பாடல் இதோ…