தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக திகழும் நடிகர் ஆர்யா அடுத்ததாக இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார். திரைப்படங்களில் மட்டுமல்லாது தற்போது வெப்சீரிஸிலும் கவனம் செலுத்தியுள்ள ஆர்யா நடித்துள்ள தி வில்லேஜ் வெப்சீரிஸ் விரைவில் அமேசான் ப்ரைம் வீடியோவில் ரிலீஸாகவுள்ளது.
முன்னதாக ஆர்யா நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான டெடி திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள திரைப்படம் கேப்டன். கேப்டன் திரைப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா லெக்ஷ்மி கதாநாயகியாக நடிக்க, சிம்ரன், காவியா ஷெட்டி, ஹரிஷ் உத்தமன், கோகுல், பரத்ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
யுவா ஒளிப்பதிவில் பிரதீப் ராகவ் படத்தொகுப்பு செய்ய கேப்டன் படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். திங்க் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள கேப்டன் திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட வருகிற செப்டம்பர் 8ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. சயின்ஸ் ஃபிக்ஷன் த்ரில்லர் படமாக வெளிவர உள்ள கேப்டன் திரைப்படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
கேப்டன் படத்தின் போஸ்டரில் இடம் பெற்றுள்ள பயங்கரமான விலங்கினம் திரைப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கேப்டன் திரைப்படத்தின் ட்ரைலர் வருகிற ஆகஸ்ட் 22 ஆம் தேதி காலை 11 மணிக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Really excited for this one 😍😍😍#Captain August 22nd 11 am 🔥🔥🔥 @ShaktiRajan @immancomposer @SimranbaggaOffc @madhankarky @tkishore555 @ThinkStudiosInd @RedGiantMovies_ @Udhaystalin @thinkmusicindia @ZEE5Tamil @ZeeTamil @DoneChannel1 pic.twitter.com/e8XFv5Dro6
— Arya (@arya_offl) August 19, 2022