Copyright Galatta.com. All rights reserved.
தமிழ் சினிமாவின் பிஸியான நடிகர்களில் ஒருவர் இசையமைப்பாளராக இருந்து நடிகராக மாறிய ஜீ.வி.பிரகாஷ்.இவரது 100% காதல் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இதனை தொடர்ந்து இவர் எழில் இயக்கத்தில் உருவாகியுள்ள ஆயிரம் ஜென்மங்கள் படத்தில் நடித்துள்ளார்.
ஈஷா ரெப்பா இந்த படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.சதிஷ்,ஆடுகளம் நரேன்,வையாபுரி,மனோபாலா,நிகேஷா படேல் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
சி சத்யா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.அபிஷேக் பிலிம்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.
இந்த படம் டிசம்பர் 20ஆம் தேதி வெளியாகும் என்ற அறிவிக்கப்பட்டுள்ளது.ஜீ.வி இசையில் தயாராகி வரும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.இந்த படத்தின் அருப்புக்கோட்டையிலே என்ற பாடல் வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது