தமிழ் திரையுலகின் முன்னணி ஆக்சன் கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் அருண்விஜய் நடிப்பில் கடைசியாக இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் வெளியான மாஃபியா திரைப்படத்தை தொடர்ந்து, அடுத்தடுத்து அதிரடி ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படங்கள் வெளிவருகின்றன.
அந்த வகையில் பாக்சர் மற்றும் சீனம் ஆகிய திரைப்படங்கள் நிறைவடைந்து இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் கதாநாயகனாக நடித்திருக்கும் பார்டர் திரைப்படம் வருகிற நவம்பர் 19ஆம் தேதி வெளியாகிறது.
அடுத்ததாக இயக்குனர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடித்து வரும் யானை திரைப்படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தீபாவளி விருந்தாக வெளிவரும் அருண் விஜய்யின் வா டீல் படத்தின் டீசர் இன்று வெளியானது.
இயக்குனர் ரத்தின சிவா இயக்கத்தில் அருண் விஜய் கதாநாயகனாக நடிக்கும் அதிரடித் திரைப்படமான வா டீல் படத்தை ஜேஎஸ்கே ஃபிலிம் கார்ப்பரேஷன் தயாரித்துள்ளது. அருண் விஜய்க்கு ஜோடியாக நடிகை கார்த்திகா நாயர் நடிக்க சதீஷ், வம்சி கிருஷ்ணா மற்றும் நடன இயக்குனர் கல்யாண் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இசையமைப்பாளர் S.தமன் இசையமைப்பில்,கோபி ஜெகதீஸ்வரனின் ஒளிப்பதிவு செய்ய, பிரவீன்.கே.எல் படத்தொகுப்பு செய்துள்ளார். இன்று வெளியான அருண் விஜய்யின் வா டீல் படத்தின் அதிரடியான டீசரை கீழே உள்ள லிங்கில் காணலாம்.