தமிழ் சினிமாவில் தனது விடாமுயற்சியால் தடம் பதித்தவர் அருண் விஜய்.இவர் கடைசியாக கார்த்திக் நரேன் இயக்கத்தில் தயாராகியிருந்த மாஃபியா படத்தில் நடித்திருந்தார்.இந்த படத்தில் பிரசன்னா ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.ப்ரியா பவானி ஷங்கர் இந்த படத்தின் ஹீரோயினாக நடித்திருந்தார்.இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும் ரசிகர்களிடம் சுமாரான வரவேற்பை பெற்றிருந்தது.
மாஃபியா படத்தின் ரிலீஸை தொடர்ந்து அருண்விஜய் சினம்,பாக்ஸர்,அக்னி சிறகுகள்,அருண் விஜய் 31 உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார்.கொரோனா பாதிப்பிற்கு முன் அறிவழகன் இயக்கத்தில் உருவாகி வந்த அருண் விஜய் 31 படத்தில் விறுவிறுப்பாக நடித்து வந்தார்.கொரோனா பாதிப்பு காரணாமாக இந்த படத்தின் படப்பிடிப்பு தடைபட்டுள்ளது.
AV 31 படத்தை அறிவழகன் இயக்குகிறார்.இந்த படத்தில் ரெஜினா மற்றும் ஸ்டெபி படேல் இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.சாம்.சி.எஸ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்திற்கு ஜிந்தாபாத் என்று படக்குழுவினர் பெயரிட்டுள்ளனர் என்ற தகவல் கிடைத்திருந்தது.
ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.இந்த படத்தின் இரண்டுகட்ட படப்பிடிப்புகள் நிறைவடைந்து தற்போது கொரோனா காரணமாக படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.இந்த படத்தின் ஷூட்டிங் இன்னும் 25 நாட்கள் மீதமுள்ளதாக இயக்குனர் தெரிவித்திருந்தார்.
தற்போது இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ளது என்று படத்தின் இயக்குனர் அறிவழகன் மற்றும் படத்தின் நாயகன் அருண் விஜய் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஷூட்டிங் நிறைவடைந்தபின் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
It’s has been a long time longing 4 U & today, d day Im seeing U. Yes, time keeps u & me away regularly, hardens me to see U again but my love will be ever bcos You, the one showed, showing who am I and why I’m here. With lots of love, my passion continues ❤️ #AV31 pic.twitter.com/qzJoNAQRPg
— Arivazhagan (@dirarivazhagan) December 7, 2020
Kick started the final action packed schedule for #AV31 today!💪 Wonderful getting back to work with this amazing team.. Putting our fullest efforts to give you'll an unique experience🤞👍 @dirarivazhagan @ReginaCassandra @SamCSmusic @All_In_Pictures @DopRajasekarB @DoneChannel1
— ArunVijay (@arunvijayno1) December 7, 2020